எதிலும் தர்மம் இருக்க வேண்டும். வாய்ப்புக்கள் கிடைத்து விட்டது என்பதற்காக எப்படி யும் நடக்கலாம் எதுவும் செய்யலாம் என்று யார் நினைத்தாலும் அவர்கள் தலையால் அழிவர் என்பதே உலக நியதி.
எனினும் சிலர் இன்னும் இன்னும் அதர்மம் செய்கின்றனர். தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று நினைத்துக் கொள்கின்றனர்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. காலமும் நேரமும் வாய்க்கும் போது வல்லவன் எழுந்து வல்லவனை அடக்குவான். இந்த நியதியை யாரும் மறந்துவிடக்கூடாது.
அடக்குமுறைகள், பழிவாங்கல்கள், அடா வடித்தனங்கள் மிக நீண்டகாலங்களுக்கு நிலைப்பதில்லை. இந்த உண்மையை இலங்கை யில் முதலில் மறந்தவர்கள் பெளத்த தேரர் கள் என்பதே உண்மை.
இந்த நாட்டில் காலத்துக்கு காலம் ஏற்பட்ட இனக்கலவரங்கள் பேரினவாதத்தின் பேயாட்டங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை பெளத்த பீடங்களிடம் இருந்த போதிலும் அவை அதைச் செய்யவில்லை.
அதன்காரணமாக இந்த நாடு தனது சொந்த மக்களையே கொன்றொழித்து உலகப் பழிக்கு ஆளாகியது.
வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் மறைப்புச் செய்தாலும் தமிழ் மக்களைக் கொன்றொழித்த பழியை - பாவத்தை சிங்கள ஆட்சியாளர்களும் அதற்குக் காரண மானவர்களும் அனுபவித்தே ஆவர்.
தவிர, தமிழினத்துக்குச் செய்த நிட்டூரத்தை இந்த உலகம் உள்ளவரை இலங்கையின் வரலாறு பேசிக்கொண்டே இருக்கும்.
இதற்கு மேலாக வன்னிப் போரில் மக்கள் கொல்லப்படும் போது போரை நிறுத்து, மனிதப் படுகொலையை கைவிடு என்று அதட்ட வேண்டி யவர்கள் பெளத்த பிக்குகள்.
ஆனால் அவர்கள் தங்கள் கடமையை மறந்து தங்கள் கோலத்தை மறந்து கெளதம புத்தபிரானின் போதனைகளைத் துறந்து மனிதப் படுகொலைக்கு ஆதரவு கொடுத்தனர்.
கொண்ட கொள்கையைக் கைவிட்டு, சம யத்தின் வழிகாட்டல்களைக் கைவிட்டு தமிழ னைக் கொல் என்று உத்தரவிட்டு அதற்கு உடந் தையாக இருந்துவிட்டு, பிரித்தோதினால் கெள தம புத்தபிரான் மன்னிப்பார் என்று நினைப்பது மகாதவறு.
எனவே இலங்கையில் தமிழ் மக்கள் உரிமை பெற்று வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வ தன் மூலமாக மட்டுமே பெளத்த பிக்குகள் தங் கள் பாவங்களுக்குப் பரிகாரம் தேடமுடியும்.
இதில் மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி அவர் கள் தமிழ் மக்கள் உரிமை பெற்று வாழ வேண் டும், இதன்மூலமே நாடு சுபீட்சத்தை அடையும் என்பதில் உறுதியாக இருப்பது மன ஆறுதலைத் தருகிறது.
இருந்தும் அவர் சார்ந்த அமைப்புக்கு ஈடாக இருக்கக்கூடிய அமைப்பினர் இலங்கை பெளத்த சிங்கள நாடு. இதைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றனர்.
பரவாயில்லை, சிலர் துள்ளிக் குதிப்பார்கள். அதைப்பார்த்து பலர் அமைதியாக இருப்பார் கள். துள்ளிக் குதிப்பவர்கள் நினைப்பதெல் லாம் எங்களுக்கு எல்லோரும் பயம் என்று.
ஆனால் அடி உச்சியில் விழும்போதுதான் ஞானம் உணரப்படும்