கிருசாந்தியின் நினைவு தினம்


யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக் குளி மாணவியான குமாரசாமி கிரு சாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை  மறுதினம் 7ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

கிருசாந்தியு டன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன்போது நினைவு கூரப்ப ட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 

இவ் நினைவு கூரலின் போது வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 21 பேருக்கு துவிச் சக்கர வண்டிகளும் 63 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

அன்றையதினம் காலை 8 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த நினைவு தின நிக ழ்வில் சகலரையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான குமாரசுவாமி கிருசாந்தி 1996 செப்ரெம்பர் 7ஆம் திகதிகாலை 7.15 மணிக்கு தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்குப் புறப்பட் டாள். தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழிய னுப்பி வைத்தார் அந்த மாணவி அந்த வாரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின் றாள். சில மணி நேரங்களில் அவள் இரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.

மகள் பாடசாலை சென்ற பின்னர் தாய் ராசம்மா கோவிலிற்கு சென்றார். சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் உரையாடினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது காலை 8.15 இருக்கும். சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண் பதற்காக தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த மகன் மற்றும் பரீட்சைக்குச் சென்றிருந்த மகள் வரும்வரை காத்திருந்தார்.

தனது மகளின் பரீட்சை 9.30இக்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார்.

எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார். வீட்டுக்கும் வீதிக்கும் இடையே நடந்துகொண்டே இருந்தார்.

அந்தவேளையே அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக வந்து, கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை தெரிவித்தார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும் நேரத்தை வீணடிக்காமல் ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல தீர்மானித்தார். 

கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக் கொண்டார். அந்நேரம் பார்த்து வீடுதிரும்பிய மகன் பிரணவன் நிலைமையை அறிந்து தாய் ராசம்மாவை தனது சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார வைத்து மயான பகுதியில் உள்ள அந்த காவலரண் நோக்கி புறப்பட்டான். கிருபாமூர்த்தியும் தன்னுடைய சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்.

ஆனால் அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை. இந்த படுகொலையே நாளைமறுதினம் ஏழாம் திகதி இரு தசாப்தங்களின் பின்னர் நினைவு கூரப்படவுள்ளது.  

இந்த படுகொலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila