தொண்டமனாறு கடல்நீரேரிக்கப்பால் இருக்கும் அக்கரை கடற்கரையினை சுற்றுலா மையமாக்குவதற்கு தொடர்ந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது.அப்பகுதியில் சுற்றுலா தலம் என பெயர்பலகை இடுவதற்கு எடுத்த முயற்சி அப்பகுதி மக்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில்; கஞ்சா இறக்குமதி மற்றும் சட்டவிரோத மதுபயன்பாடு மற்றும் மீன்பிடிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகள் தொடர்வதாகவும் அத்துடன் சட்டவிரோத நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று 14ம் திகதி இப்பகுதியினில் சுற்றுலா கடற்கரையென பெயர்பலகை பொறிக்கவந்திருந்தவர்களையே அக்கரை சுற்றுலா கடற்கரை’ என பெயர் பொறிக்கப்பட்ட பலகை நாட்டுவதற்கு பொதுமக்கள் தடைவிதித்துள்ளனர்.
இது தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றுலா கடற்கரை என்ற வாசகத்தினை அகற்றி சிறுவர் பூங்கா என மாற்றுவதற்குரிய நடவடிக்கையினை எடுப்பதாக சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comments