சிங்கள குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கொக்கிளாய் முகத்துவாரத்திலுள்ள தமிழ் மக்களது பூர்வீக காணிகளை சுவீகரிக்க வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.சர்ச்சைக்குரியவகையினில் கொக்கிளாயினில் தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து விகாரையினை அமைத்துவரும் பௌத்த பிக்குவினது வேண்டுகோளையடுத்தே தமிழ் மக்களது காணிகளை பறிமுதல் செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மீனவர்களின் பிரச்சணைக்குத் தீர்வுகானும் கூட்டம் என்னும் பெயரில்; ஆளுநர் செயலகத்தில் அண்மையினில் கூட்டமொன்று கூட்டப்பட்டிருந்தது.இக்கூட்டத்திற்கு அத்துமீறி மீன்பிடியினில் ஈடுபட்டிருக்கும் தெற்கு சிங்கள மீனவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் முகத்துவாரம் முதல் நாயாறுவரை தென்னிலங்கையை சேர்ந்த 70 சிங்கள மீனவர்களிற்கு மட்டுமே தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் இன்று 700 பேருக்கு கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் பணத்தை லஞ்சமாகப்பெற்று அனுமதிகளை வழங்கியுள்ளார். இதன் காரணத்தினாலேயே அங்கே தென்னிலங்கை மீனவர்களிற்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கடற்றொழில்; அதிகாரிகள் வேடிக்கை பார்த்துவருகின்றனர்.
இந்நிலையினில் முகத்துவாரம் பகுதியினில் சிங்கள குடியேற்றவாசிகள் அமைத்துள்ள 50 வீடுகளிற்கு மேலதிகமாக 300 வீடுகளை அமைக்க ஏதுவாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது காணிகளை கையகப்படுத்த ஆளுநர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
Add Comments