விடுதலைப் புலிகள் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இல்லாமல் இல்லை. விடு தலைப் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஒரு சாராரும் இருப்பர் என்பதை மறுக்க முடியாது.
இருந்தும் விடுதலைப் புலிகள் மீதான தமிழ் மக்களின் ஆதரவு என்பது பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழினத்துக்குச் செய்த கொடுமை காரணமாக ஏற்பட்டதுதான்.
இலங்கையின் ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் தமிழ் மக்களை தமக்குச் சமமா கக் கருதியிருந்தால், விடுதலைப் புலிகள் உள் ளிட்ட எந்த ஆயுத அமைப்புக்களும் தமிழர் தாயகத்தில் எழுகை பெற்றிருக்காது. அதற்கு அவசியமும் ஏற்பட்டிருக்காது.
இதுஒருபுறம் இருக்க, விடுதலைப் புலிகள் முன்னெடுத்த மண் மீட்புப் போராட்டம் ஈற்றில் தோல்வியில் முடிந்து போனாலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மீது தமிழ் மக்கள் கொண்ட பற்றும் பாசமும் குறைந்ததாக இல்லை.
இதற்குக் காரணம் பாலகன் பாலச்சந்திர னைக்கூட இறுதி யுத்தத்தில் இழந்த ஒரு தலை வன் என்பதாலேயே பிரபாகரன் மீதான மதிப்பு இன்றுவரை தமிழ் மக்களிடம் நிலைத்துள்ளது.
இருந்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது, அவருடன் கூட இருந்த சிலர் இப்போது விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்கள் குறித்து நாம் எதுவும் கூறத் தேவையில்லை.
ஆனால் விடுதலைப் புலிகளின் போராட் டத்தை, போராளிகளை, தமிழ் மக்களின் வர லாறுகளை கொச்சைப்படுத்தும் வகையில் யார் ஆக்கங்களை வெளியிட்டாலும் அது மன்னிக்க முடியாத ஒரு செயல் என்றே கூற வேண்டும்.
தமிழ் மக்கள் இன்றிருக்கக்கூடிய நிலை மையில் தமிழ் மக்களுக்கு எதிராகவோ அன்றி விடுதலைப் போராட்டத்தைக் கொச் சைப்படுத்தியோ எழுதுவதென்பது அநாவசிய மானது.
சிலவேளைகளில் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். இத்தகை யவர்கள் விடுதலைப் புலிகளை வஞ்சிக்க வேண்டும் என்ற நோக்கில் கூட எழுதலாம்.
ஆனால் விடுதலைப் புலிகள் இல்லாத நேரத்தில் அவர்கள் பற்றி எழுதுவது தமிழ் மக் களைப் பாதிக்குமேயன்றி அதனால் வேறு எதுவும் ஏற்படமாட்டாது.
எனவே ஆக்கப்படைப்பாளிகள் தமிழினத் துக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத் தால், தமிழினத்தின் வரலாற்றை எழுதுங்கள், வன்னிப் போரின் கொடூரத்தைப் பதிவு செய் யுங்கள். எம் இனம் அழிக்கப்பட்ட போது சர்வ தேச சமூகம் பார்த்திருந்ததை கண்டித்துக் கூறுங்கள்.
இதைவிடுத்து எங்கள் இனத்தை தாழ்த்தி, எங்கள் போராட்டத்தை வஞ்சித்து எழுதுவது எம் தலையில் நாமே மண்ணைக் கொட்டுவ தாக அமையும்.
இதைவிட எங்கள் சமயம், எங்கள் பண்பாடு இவற்றை விமர்சிக்கத் தலைப்படுவதும் அவ் வளவு நன்மை தரமாட்டாது என்பதால் ஆக்கப் படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை தமிழி னம் வாழ, தமிழினம் எழுகை பெற அவியல் செய்ய வேண்டும்.