தென்னிந்திய, தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு யாழில் தடை!

npc

வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்து நடை பாதை வியாபாரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் மற்றும் தென்னிந்திய வியாபாரிகளுக்குத் தடை விதிக்கவேண்டுமென வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை நடைபெற்ற வடமாகாணசபையின் 105ஆவது அமர்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரேரணையானது வடமாகாண சபை உறுப்பினர் ஜெயசேகரத்தால் முன்மொழியப்பட்டதுடன் இது தொடர்பாக அவர் உரையாற்றுகையில்,
வெளிமாவட்டத்திலிருந்து வருகை தரும் வியாபாரிகளால் நிரந்தர வியாபாரிகள் பாதிப்படைகின்றனர்.
அத்துடன், பண்டிகைகாலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து படையெடுத்து வரும் வியாபாரிகள் நடைபாதை வியாபரத்தை மேற்கொள்வதனால், நிரந்தர வியாபரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றார்கள்.
அதேபோன்று தென்னிந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வரும் வியாபாரிகள் மேற்கொள்ளும் வியாபர நடவடிக்கைகளால் இங்குள்ள வியாபாரிகள் பாதிக்கபப்டுகின்றனர். எனவே வெளிமாவட்ட வியாபாரிகள் தென்னிந்திய வியாபாரிகள் வியாபரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது உரையாற்றிய முதலமைச்சர், இது தொடர்பான நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளதால், அதன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான சட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்எனத் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila