புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தில் சம ர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர் பாக பொதுமக்களுடன் கலந்துரை யாடுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் மாநாயக்க தேர ர்களுக்கு சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கப்படும்.
எனினும் அரசியலமைப்புச் சட்டமோ அல்லது வரைவோ இதுவரை உருவாக்கப்படவில்லை எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.