நேற்றைய தினம் ஆளுநர் அலுவலகம் முன்பதாக இடம்பெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தினில் சித்தார்த்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பின்வரிசை வீரர்களாக பங்கெடுத்திருந்தனர்.அதிலும் வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் ஆளுநருடன் நடந்த சந்திப்பினில் சிவாஜிலிங்கம் சகிதம் பங்கெடுத்திருந்தார்.
எனினும் இன்று சனிக்கிழமை யாழ்.இந்து கல்லூரி முன்பதாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினில் சித்தார்த்தன் மற்றும் அவரது கட்சி சார்ந்தவர்கள் எவருமே எட்டிப்பார்த்திருக்கவில்லை.
இதனிடையே மக்களது சீற்றத்திற்கு அஞ்சி தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் நிகழ்வு பக்கம் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை. இரா.சம்பந்தனும் கொழும்பினில் பதுங்கிக்கொண்டார்.வழமை போலவே சரவணபவன் தனது வேவு அணியினரை அனுப்பி அனைத்து தகவல்களையும் திரட்டுவதில் ஆர்வம் காட்டியிருந்தார்.
இதனிடையே வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஈறாக எவரும் இந்துக்கல்லூரி நிகழ்வினில் பங்கெடுக்கவில்லை.
இதனிடையே புத்தூரினில் நடைபெற்ற மற்றொரு விவசாயம் சார்ந்த நிகழ்வினில் சித்தார்த்தன் கட்சி அமைச்சரான சிவனேசன் பங்கெடுத்திருந்தார்.எனினும் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் பங்கெடுத்ததாக ஆதரவு தரப்புக்கள் தகவல் வெளியிட்டிருந்தன.