குறித்த பகுதி, சுற்றுலா மையமாக உருவாக்கப்பட்டதன் பின்னர் அங்கு மது அருந்த வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இளைஞர்கள் யுவதிகள், அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தாம் பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுடன் பேசிய போதும் எந்தவிதமான பதிலும் தமக்கு கிடைக்காத நிலையில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நாளையதினம்(26) அன்று கைதடியில் மாகாணசபை அமர்வுகள் நடைபெறுவதனைத் தடைசெய்யும் வகையில் அங்கு போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் நியாயமான கோரிக்கையினை கேட்டறிந்து கொண்ட யாழ்.மாவட்ட அமைப்பாளர் செவ்வேள் தற்காலிகமான தீர்வாக குறித்த பகுதியில் பொலிஸ் காவலரண்களை அமைத்துச் சமூக சீர்கேட்டினை தடைசெய்யும் வகையில் நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும், எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பாக வடமாகாண ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இதற்கான நிரந்தர தீர்வினை எடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.