ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளதாக லங்காஈநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டிற்கு கடற்படை தளபதி ஒருவரை நியமித்து, அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்வதற்கு முன்னர் நீக்கியமை சாதனையாகும்.
கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட ட்ரெவிஸ் சின்னையாவை நேற்று மாலை நீக்கிவிட்டு கடற்படை தளபதியாக ரணசிங்க என்பவரை நியமிக்கும் கடிதத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எந்தவொரு நாட்டிலும் நடக்காத ஒரு சம்பவமே இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடற்படை தளபதியாக செயற்படும் ட்ரெவிஸ் சின்னையா தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comments