வடக்கில் சர்ச்சைக்குரிய வகையில் இலங்கைப்படைகளின் சிவில் பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்படும் பண்ணைகளி;ல் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதுடன் தொழிற்சட்டங்களும் மீறப்படுவதாக கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் வடக்கில் சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டனர்.
மேலும் இவ்வாறான பண்ணைகளில் சம்பளம் ஊழியர் சேமலாபநிதியம் போன்ற விடயங்களில் அநீதிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இவ்வாறான விவசாயப்பண்ணைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.