வெலிக்கடையில் 27 கைதிகள் பலி 20 பேர் காயம்! உறவினர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்திருந்தனர்.
இதில் இறந்த கைதி ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்த ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 பேரின் குடும்பத்தாருக்கும், காயமடைந்த ஐவரின் குடும்பத்தாருக்கும் இதுவரை நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்கப்படாமல் இருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைவாக இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடையவர்களுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றினூடாக அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் திட்டமிடப்பட்டவொன்று என தற்போதைய அரசாங்கம் அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமித்த மூவரடங்கிய குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே, வெலிக்கடை சிறைச்சாலைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை அனுப்புவதற்கு ஆலோசனை வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது பதவிக் காலத்திலேயே சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila