உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தில் தீர்மானம் எடுப்ப தற்கு ஐந்தாறு நாட்கள் அவகாசம் கேட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் கால அவகாசத்தில் ஒரு சரியான முடிவை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யாமல் இழுத்தடிப்புச் செய்துள்ளார்.
இதன்காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை இழுத்து பூட்டி அதன் செயற்பாட்டை முடக்கி உள்ளனர்.
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் வழக்கைத் தொடர்ந்தும் வவுனியாவில் நடத்துமாறு கேட்கின்றனர்.
அதற்கு ஆவன செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த யாழ்ப் பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டி ருந்தனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஐந்து, ஆறு நாட்கள் அவகாசம் தேவை என ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஜனாதிபதி கோரியிருந்த கால அவகாசம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கள் பொறுமையோடு காத்திருந்தனர்.
எனினும் கால அவகாசம் முடிந்ததேயன்றி ஜனாதிபதியிடம் இருந்து எந்தப் பதிலும் இது வரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் தொடர் உண்ணாவிரதமிருக் கும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக யாழ்ப் பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
35 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத மிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விட யத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித மான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேவேளை உண்ணாவிரதமிருக்கும் கைதி களின் கோரிக்கைகளை மனிதாபிமான அடிப் படையில் கையாள்வதற்கு நல்லாட்சி தயா ரில்லை எனும்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் தவிர்க்க முடியாததாகின்றது.
பல்கலைக்கழகத்தைப் பூட்டி போராட்டம் நடத்துவது சரியானதா? என்று வாதப்பிரதி வாதங்கள் எழக்கூடும்.
அவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் எழும் போது உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசி யல் கைதிகளின் விடயத்தில் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை என்ன?
ஜனாதிபதியைச் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங் கள் என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுள்ளனர்.
இந்தக் கோரிக்கை பல்கலைக்கழக மாண வர்களின் ஒரு நல்ல அணுகுமுறை. ஜனாதிபதி யைச் சந்தித்து நிலைமைகளைக் கூறுவோம் என்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தீர்மானத்துக்கு - அணுகுமுறைக்கு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன உரிய மதிப்புக் கொடுத்திருக்க வேண்டும்.
தான் கேட்ட கால அவகாசத்துக்குள் உண்ணா விரதமிருக்கும் கைதிகளின் விடயத்தில் அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் அது அவருக்கு மிக உயர்ந்த நன்மதிப்பு ஏற்படுத்தியிருக்கும்.
மாறாக கால அவகாசம் கேட்டுவிட்டு அது பற்றிப் பேசாமல் விட்டால் அது பல்கலைக்கழக மாணவர்களை ஏமாற்றியதாகவே பொருள்படும்.
இத்தகையதோர் சூழ்நிலைதான் யாழ்.பல் கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக த்தை முடக்குகின்ற நிலைமைக்குக் கொண்டு வந்தது.
எனவே, தமிழ் அரசியல் தலைமையையும் வாலாயப்படுத்தி வைத்திருக்கும் நல்லாட்சி உண் ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிக ளின் விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை பல விடயங்களில் சுமுக நிலையை ஏற்படுத்தும் எனலாம்.