இடைக்கால வரைபு தொடர்பில் பாராளு மன்றத்தில் இடம்பெறும் விவாதத்தின் மீது நேற்று முன்தினம் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின ரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், பெளத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில் பிரச்சி னையில்லை என்று கூறியுள்ளார்.
இலங்கையில் எது பிரச்சினையாக இருக் கிறதோ அதனைப் பிரச்சினையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியி ருப்பது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற மொழிகளால் பிரச்சினை உருவாகிறது என்பது ஒரு குறிப்பிட்ட அளவைக் கொண்டது.
மாறாக இலங்கை பெளத்த நாடு என்பது தான் இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு மூலகாரணமாகும்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழியை தமிழ் மக்களுக்குக் கற்பித்தால் அதுபற்றி எவரும் எதிர்ப்புக் காட்டமாட்டார்கள் என்பதுடன் அதனை ஆதரிப்பர்.
இதேபோன்று சிங்களப் பிரதேசங்களில் தமிழ் மொழியை கற்பித்தால் மொழியை அறிந்து வைத்திருப்பது தொடர்பாடலுக்கு சிறந்தது என்ற அடிப்படையில் சிங்கள மாணவர்களும் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவர்.
ஆனால் பெளத்த விகாரை ஒன்றை யாழ்ப் பாணத்தில் கட்டும்போது அல்லது சைவா லயத்தை சிங்களக் கிராமங்களில் நிர்மாணிக் கும்போது பிரச்சினை ஆரம்பித்து விடுகின்றது.
ஆக, சிங்கள மொழியைத் தமிழ் மக்கள் கற்பதற்கும் தமிழ் மொழியை சிங்கள மக்கள் கற்பதற்கும் தயாராக இருக்கின்றனர். இதுவே யதார்த்தம்.
ஆனால் சமயம் என்று வந்துவிட்டால் அங்கு பிரச்சினை தொடங்கி விடுகிறது.
ஆகையால் இலங்கையின் இனப்பிரச் சினை என்பது பெளத்த மதவாதத்தில் இருந்து தான் எழுகை பெறுகிறது.
எனவே பிரச்சினைக்கு அடிநாதமாக இருக் கக்கூடிய பெளத்த மதத்தை சிங்களவர்கள் தமக்கு முன்னுரிமைப்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
அதேவேளை பெளத்த மதத்துக்கு இலங் கையில் முன்னுரிமை எனும்போது, இந்த நாட் டின் ஆதிச் சமயமாகவும் ஆட்சிச் சமயமாக வும் இருந்த இந்து சமயத்தின் நிலை என்ன வாகிறது என்ற குழப்பம் ஏற்படுகிறது.
எனவே ஒன்றில் இலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அல்லது சிங்கள பிரதேசங்களில் பெளத்தத்துக்கு முன்னுரிமை என்றால் தமிழர் தாயகத்தில் இந்து சமயத் துக்கு முன்னுரிமை என்ற நியமம் ஏற்படுத்தப் பட வேண்டும்.
இதைவிடுத்து பெளத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில் எங்களுக்குப் பிரச்சினையில்லை என்றால் வட மாகாணத்தில் எங்கெல்லாம் அரச மரங்கள் நிற்கின்றனவோ அங்கெல்லாம் பெளத்த விகாரைகளை அமைக்கலாமா?
இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆத ரவு தெரிவிக்கிறதா என்ற கேள்வி எழும்.
எது எவ்வாறாயினும் பெளத்தத்துக்கு முன் னுரிமை கொடுக்கலாம் என்று கூறிவிட்டு பின்னர் வடக்கு கிழக்கில் விகாரை அமைப் பதை எதிர்ப்பதென்பது சட்டத்துக்கு முரணான செயலாகும் என்பதால் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மிகவும் நிதானமாக நடந்து கொள்வது அவசியம்.