முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை பலவந்தமாக பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக இந்த கிராமத்தின் பொது அமைப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை பலவந்தமாக பிடித்து வேலி அமைக்க முடியும் என பொது அமைப்புக்கள் கேள்விகள் எழுப்பியுள்ளன.
மேலும் குறித்த காணியானது, அரசாங்க காணியாகும் எனவும், குறித்த நபரின் செயற்பாட்டினினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் தனிநபர் ஒருவர் பெருமளவுக் காணியினை கையகப்படுத்த முயல்வதன் பின்னணியில் அரசியலா அல்லது அதிகாரிகளின் துணையா உள்ளது எனவும் குறித்த அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிநபர் ஒருவர் பலவந்தமாக காணி பிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாங்குளம் பொது அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுப்பதாக மாங்குளம் பொது அமைப்புக்கள் எச்சரித்துள்ளனர்.
Add Comments