விடுதலைக்கு வேராகி, மண்ணுக்கும், மக்களுக்காகவும் மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் மிக நீண்ட காலத்தின் பின் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் எழுச்சியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.25 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாவீரர்களின் நினைவாக மாணவர் ஒன்றியத்தினால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
பிரதான சுடரேற்றும் நிகழ்வு மாலை 6.05 மணிக்கு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.