காலி பிரதேசத்தை அண்டிய கிந்தோட்டை - விதானகம, சபுகம பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மீது இன்று மாலை தொடக்கம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் கலவரம் ஒன்றுக்கான அறிகுறிகள் கடந்த புதன் கிழமை ஏற்பட்ட நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உடனடியாக செயற்பட்டு, குறித்த பிரதேசத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பை பெற்றுக் கொடுத்திருந்தார்.
இன்று மாலை விசேட அதிரடிப்படை விலக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும், பல வீடுகள் மற்றும் நபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அமைச்சர் ஹக்கீமை தொடர்பு கொண்டு வினவிய போது, மேலதிக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்தார்.