கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கில் ரெலோ கட்சிக்கான ஆசனப்பங்கீடு மற்றும் சபைகளின் தலைவர் பதவி தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 5 சபைகளின் தவிசாளர் பதவியையும் கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் தலா ஒரு தவிசாளர் பதவியையும் மட்டக்களப்பு மாநகரசபையில் முதல்வர் உள்ளிட்ட 3 உறுப்பினர்களையும் அம்பாறையில் திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய இரு சபைகளின் தவிசாளர்களையும் தமக்குத் தர வேண்டும் என ரெலோ கோரியுள்ளது. இருதரப்பும் இணக்கப்பாட்டுடன் சுமுகமான முடிவை எட்டியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் தான் இறுதிமுடிவு எடுக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுக்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, உப தலைவர்களான ஹென்றி மகேந்திரன், இந்திரகுமார் பிரசன்னா, தலைமைக்குழு உறுப்பினர்களான விநோநோகராதலிங்கம் என்.சுரேன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகிய பங்காளிக் கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளன. இந்த பேச்சுவார்த்தை கொழும்பில் எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதேவேளை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி விலகுவது உறுதியாகி விட்டது எனவும், வராதராஜப்பெருமாள் தலைமையிலான மாற்று அணி கூட்டைப்பிற்குள் வருகின்றது எனவும் கூறப்படுகிறது. |
உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு - தமிழரசுக் கட்சியுடன் ரெலோ பேச்சு!
Related Post:
Add Comments