இடைக்கால வரைபு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகித் தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
இடைக்கால வரைபு மீதான விவாதத்தின் போது பாராளுமன்றம் அதிரும் என்று கூற லாம். அந்தளவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பு கடுமையான எதிர்ப்பைக் காட்டவுள்ளது.
இதற்கு பெளத்த மகா சங்கங்களின் ஆதர வும் இருப்பதால் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள், தீயிட்டுக் கொளுத் தும் நடவடிக்கைகள் என ஏராளமான சம்பவங் கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுக ளும் ஆயத்த நிலையில் உண்டு என்பதையும் கூறித்தானாக வேண்டும்.
இடைக்கால வரைபு மீதான விவாத்தின்போது இப்படியயாரு பதற்றநிலை ஏன்? எதற்கு? என் றால் எல்லாம் தமிழினத்துக்கு எதிரான பேரின வாதத்தின் கொதிப்பு என்று கூறுவதே பொருத் துடையதாகும்.
காலத்துக்கு காலம் இவ்வாறான விடயங் களை முன்வைத்து அது தொடர்பில் கடும் எதிர்ப் புத் தெரிவித்து இந்த நாட்டில் இருந்து தமிழி னத்தை அழிக்க வேண்டும் என்ற தீர்மானத் துக்கு பேரினவாதம் வருவதற்கான கருக்கட் டல் இப்படித்தான் ஆரம்பிக்கும். இதற்கு பல சாட்சியங்கள் உண்டு.
வன்னி யுத்தத்தில் தமிழ் மக்களைக் கொன் றொழித்த பின்னரும் சிங்களப் பேரினவாதமும் பெளத்த பீடங்களும் தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கி ன்றன.
அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறை வேற்றினால் இந்த பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பி னர் விமல் வீரவன்ச கூறியிருந்தார். இன் னொரு உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு இடி விழ வேண்டும் என்றார்.
ஆக, தமிழ் மக்களுக்கு மிக சொற்ப உரிமை களைக் கொடுத்தால்கூட அதனைத் தாங்க முடியாது என்றளவில் பாராளுமன்றத்துக்கு இடி விழட்டும் என்ற சாபமிடுமளவிலேயே சிங் கள பேரினவாதம் உள்ளதென்பதை இனி மேலாவது உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கு எதிராக எத்தனையோ தீர்மானங்களைக் கொண்டு வந்த இந்தப் பாராளுமன்றத்துக்கு குண்டு வைத்தால் என்ன? இடி விழுந்தால் என்ன? அதுபற்றித் தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
தமிழ் மக்களின் ஒட்டுமொத்தக் கருசனை, எதுவும் இல்லாத இடைக்கால வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து தமிழி னத்தின் தலையில் மண்ணை கொட்டி விடுமோ என்பதுதான்.
பாராளுமன்றத்துக்கு இடி விழ வேண்டும் என்று சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதெல்லாம் தமிழ் மக்களுக்கு ஏகப்பட்ட உரிமைகளும் அதிகாரங்களும் கொடுப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காகவே.
இந்த மாயையில் மருண்டு விடாமல் தமிழ் மக்களுக்கான உரிமை, அதிகாரம் என்ப வற்றை துணிச்சலோடு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கேட்க வேண்டும்.
இதைவிடுத்து இடைக்கால வரைபை ஆத ரித்தால் தமிழ் மக்களின் விடயத்தில் கூட்ட மைப்பு குழிபறிப்பதாகவே பொருள்படும்.