அவிஸாவளை பகுதியில் கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பிரதேசம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததுடன் சாலாவ பிரதேசத்தை சுற்றி சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இந்திய ரோ இருப்பதாக சந்தேகம் உள்ளதாக சட்டவாளரும் சிரேஸ்ர அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் இந்த வாரம் அரசியல் களம் வட்ட மேசையில் தெரிவித்துள்ளார். மேலும் பல திடுக்கிடும் தகவல்களை இதன்போது பகிர்ந்துள்ளார்.