பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் ஈகப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகளின் கல்லறையில் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வுகள், இன்றைய தினம்(27) காலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு, துயிலுமில்ல பாடல் இசைக்க ஈகைச்சுடர் ஏற்றி நிகழ்வு ஆரம்பமானது.
பிரதான சுடரை மாவீரர் ஈகப்பேரொளி முருகதாசனின் தந்தையார் ஏற்றிவைத்துள்ளார்.
இதேவேளை, ஜெனீவாவில் தன்னுடலை தீக்கிரையாக்கி தமிழர்களின் சுதந்திர வாழ்விற்காய் உயிர்த்தியாகம் செய்த மாவீரன் ஈகப்பேரொளி முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள விதைகுழி மேல் கட்டப்பட்டுள்ள 21 தியாகிகளுக்குமான நினைவுக் கல்லறையில் சிறப்பு மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.