வட மாகாணத்திலுள்ள - அரச வெற்றிடத்துக்கு ; ஏனைய மாகாணத்தை சேர்ந்தவர்கள் நியமனம்



தமது அமைச்சுக்களுக்கு உட்பட நிறுவனங்களின் வெற்றிடங் களை நிரப்பும்பொழுது வடக்கு கிழக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு எந்தவித அநீதியும் இழைக் கப்படவில்லை என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபையின் முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றினார்.

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாத த்தில் நேற்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிட ங்க ளுக்கு ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த வர்கள் நியமிக்கப்படுவதாக சபையில் உரை யாற்றிய வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறு ப்பினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதற்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிடைப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப் படையில் எழுத்து மூலமான பரீட்சை மற் றும் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகு திகள் பரிசோதிக்கப்பட்டன. 

தகுதியை கொண்டிருந்த பெரும் எண்ணிக்கையான னோருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக த்திற்கு 40 பேரும், கிழக்கு பல்கலைக்கழக த்திற்கு 74 பேரும், தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு 27 பேருக்கும், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்டதான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் 80 பேருக்கும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 151 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டி ருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

விவாதத்தில் கலந்து கொண்ட நிதி இரா ஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன,

2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்று இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டிரு ப்பதாக தெரிவித்தார்.

தேர்தல் காலப்பகுதி யில் வழங்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார உறுதிமொழிகளை நிறைவேற்றுவ தற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. 

அத்தியாவசிய பொருட்களின் விலை கள் குறைக்கப்பட்டுள்ளன. இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் கிராமிய பொருளாதா ரத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க உரையாற்றுகையில்,

புதிய ஊடகக் கலாசாரத்தை கட்டியெழு ப்பும் சூழ்நிலையில் நாம் தற்பொழுது இரு க்கிறோம் என்று தெரிவித்தார். சமூகத்தின் எதிர்கால நலன் கருதி, ஊடகங்கள் கொண்டுள்ள அதிகாரங்கள் குறித்து கூடுதலான கவ னம் செலுத்த வேண்டுமென்றார். 

அரச ஊட கங்களைப் போன்று தனியார் ஊடகங்களும் அரசியல் மயத்தை நோக்கி சென்று கொண் டுள்ளன.
 
அரசியல் ரீதியிலான செய்திகளை இன்று ஊடகங்களில் காணக்கூடியதாக உள் ளது. சீர்குலைந்திருந்த பிரஜைகள் சமூக த்தை சிறப்பான சமூகமான மேம்படுத்துவ தற்கு ஊடகங்களைப் போன்று ஊடக உரி மையாளர்களும் செயற்பட வேண்டும்.

சமூகத்தை ஊடகங்கள் தரம் குறைந்த வகையில் முன்னெடுக்கும் ஊடகக் கலை தற்போது உருவாகியுள்ளது. 

நாட்டில் புத்திஜீவிகளைக் கொண்ட அரசியல் பொருளாதார கலந்துரையாடல்கள் இடம்பெறுவதில்லை.
 
பொதுமக்களை தரம் குறைந்த வகையில் இட்டுச் செல்வதற்கு சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன.

 இவ்வாறான நிலையை நீக்கு வது ஊடகங்களின் பொறுப்பாகும் என தெரிவித்தார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila