இவர்களில் ஒருவர் முழு நாட்டிற்கும் சேவையாற்றக்கூடிய கல்வி இராஜாங்க அமைச்சராகும். ஏனைய இராஜாங்க அமைச்சு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மற்றும்
தோட்ட உட்கட்டமைப்பிற்கான அமைச்சர் ப.திகாம்பரம் அவர் சட்ட ரீதியான அமைச்சராக இருக்கின்றபோதும் குறிப்பிட்ட வரையறைக்குள் சேவை செய்யக்கூடிய அமைச்சராவார்.
ஆகவே பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கிரியல்ல ஐ.தே.கவில் அனுபவம் மிகுந்தவர் அதேபோல் அவர் ஓர் சிறந்த பேச்சாளரும் சட்டதரணியுமாவர்.
க.வேலாயுதம் அவர்கள் தொழிற்சங்க அனுபவத்துடன் ஊவா மாகாண சபையின் நீண்டகால அனுபவமிக்கவர். இருப்பினும் அவரின் எண்ணங்களை செயல்படுத்தக்கூடிய சட்டபூர்வமான வர்த்தமானி அறிவித்தல்களை நாம் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை நாம் அறிந்த வகையில் அவரின் செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இதுவரை கிடையாது எனலாம்.
இந்த நிலையில் மலையக மக்களின் விடயங்கள் சம்பந்தமாக பூரண விபரங்கள் அவருக்கு நன்கு தெரிந்திருந்தாலும், முழு நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உரிமை, அவர்களின் உயிர் இழப்பு, இழந்தவைகளை அறிந்திருப்பாரே தவிர அனுபவித்தவர் என்று கூறமுடியாது.
கடந்த ஐ.தே.க ஆட்சி காலத்திலும் கூட இவர் காலம் சென்ற காமினி திசாநாயக்கா அவரின் சார்பாகவே வடக்கு கிழக்கு பகுதிக்கு சென்று வந்திருக்கலாம். ஆனால் அரச பிரதிநிதியாக அப்பகுதி மக்களுக்கு சேவையை செய்யவோ.
அல்லது அவர்களுக்காக குரல் கொடுக்கவோ சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் நடைபெற்று பல உயிர்களையும், சொத்துக்களை இழந்த தமிழ் மக்களின் துயர நிலையிலும் இவர் ஐ.தே.க விற்காக நியாயப்படுத்தும் வேலைகளையே செய்தவர் என்று கூறப்படுகின்றது.
அந்த நிலையில் கடந்த அரசின் காலப்பகுதியில் நாம் அவ்வப்போது தமிழர்களின் உரிமை சம்பந்தமான பத்திரிகை அறிக்கைகளை வேலாயுதம் அவர்கள் தெரிவித்து அம் மக்களுக்காக குரல் கொடுத்தார். இது பத்திரிகை அறிக்கையாகவே இருந்ததே தவிர இவர் சார்ந்த கட்சியின் தலைவர்களிடையே ஓர் அழுத்தங்கள் கொடுத்ததாக இல்லை.
மலையக மக்களின் சம்பள உயர்வு சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம் செய்கின்ற இரண்டு தொழிற்சங்கங்களாக அன்றைய(ஐ.தே.க) அரசு தனது உறுதிக்காக ஏற்படுத்திய இ.தொ.கா,இ.தே.தோ.தொ.ச ஆகிய அரசின் தோட்ட முதலாளிமார்களின் எடுபிடியாக ஒப்பந்தங்களை செய்து அதற்கு நியாயம் கற்பித்தும் வந்துள்ளார் என்பது மலையக மக்களுக்கும் ஏனையவர்களுக்கும் நன்கு தெரிந்தவிடயமாகும்.
தற்பொழுது அரசு கைமாறியதன் மூலம் அமைச்சர்களாகிவிட்டவர்களில் இவரும் ஒருவர் இப்பொழுது அமைச்சராகி தமிழகம் சென்றுள்ளார். இவர் அரச பிரதிநிதியாக போனாரா?அல்லது உத்தியோக பூர்வமாக சென்றாரா? ஜனாதிபதியின் பிரதிநிதியாக சென்றாரா? என்பது எம் போன்ற மக்களுக்கு தெரியாது இவர் சென்று முதல் முதலாக சந்தித்த அரசியல்வாதி மு.கருணாநிதி இவர்தான் தமிழ் மக்கள் இலங்கையில் உயிர் இழக்கவும் இறுதியுத்தத்தின் காரணகர்த்தாவாகவும் எம் மக்களுக்கு குரல் கொடுப்பதை போல் நடித்து நாடக உண்ணவிரதத்தை மேற்கொண்டு அன்றைய மத்திய அரசை பணிய வைக்கும் சக்தி இருந்தும் அதை செய்யாது உலகிற்கே தமிழ் தலைவனான .பிரபாகரன் வந்துவிடக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் எம்மக்களை பலமிழக்க, உயிரிழக்க, உடமைகளை இழக்க முக்கிய காரணமானவர் என்பது சாதாரண பொது மகனுக்கும் தெரிந்தவிடயமாகும்.
இவரைப் பார்த்து இலங்கையின் நிலைமை மாறி விட்டதென்று ௬றுவதால் எமது இனத்திற்கு என்ன கிடைக்கும் முடிந்தால் மத்திய அரசை சார்ந்தவர்களை பார்த்து இலங்கையில் அரசமாற்றத்தில் தமது மக்களின் பங்கு முழுமையானதாக இருப்பதால் இவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவுங்கள் அல்லது ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம் நடக்க முடியாத அப்பாவியாக நடிக்கும் மு.கருணாநிதியை பார்த்து இலங்கையில் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படும். உலகில் உள்ள அனைத்து நாட்டிலும் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளை எல்லாம் இலங்கைக்கு வந்துவிடுங்கள்.
இலங்கை அகதிகள் என்ற சொல்லை அகராதியில் இருந்து எடுத்து விடுவோம். இராணுவம் அகற்றப்படும், காணிகள் மீள் கையளிக்கப்படும், தமிழர்களின் பிச்சினைகளையும் தீர்த்து விடுவோம் என்றெல்லாம் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து எமக்கெல்லாம் இப்பொழுது இலங்கையில் பாலும், தேனும், உணவும், வீடு வசதிகளும் கொட்டிக்கொடுக்கும் அரசாக காட்ட முயற்சிப்பது ஆச்சிரியமாக இருந்தது.
அதேவேளை ஜனாதிபதி, பிரதமா், ஏனைய முக்கிய அமைச்சர்கள் கூட குறிப்பிட்ட வாக்குறுதிகளை கூறாது மௌனம் சாதிக்கும் இவ்வேளையில் இராஜாங்க அமைச்சரான இவர் மேற் கூறிய உறுதிமொழிகளை அள்ளி வீசியதின் மர்மம் என்ன? நீங்கள் எப்பொழுது வடக்கு பகுதி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவாக மாறினீா்கள்?
மக்கள் படும் துயரங்களுக்கு எல்லாம் முன்னைய அரசின் சார்பாக நியாயம் கூறும் டக்ளஸ் தேவானந்தா போல் அரசின் பிரதிநிதியாக, இப்பொழுது இன்று வரை எந்த விதமான பிரச்சினைகளையும் தீர்க்க முன்வராது ஒவ்வொரு நாளும் தமிழ் அரசியல் தலைமைகளை திருப்திப்படுத்த அரசு சார்பாக தமிழக மக்களின் மன மாற்றத்தை ஏற்படுத்த ஏன் இந்த அவசரம? நீங்கள் நன்மைகளை மலையக மக்களுக்கு செய்து காட்டிய பின் தமிழ்நாடு சென்று தமிழக மக்களுக்கு உங்களின் சாதனையை கூறுங்கள் வீணாக தமிழக மக்களுக்கு பிரச்சாரத்தின் மூலம் உற்சாகத்தையோ அல்லது அனுதாபங்களையோ ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
முடிந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களை பெற்றுக்கொடுக்க இந்த 100 நாள் திட்டத்தில் முயற்சியுங்கள். மலையக மக்களின் சம்பள உயர்விற்காக முறையான கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள் அல்லது ஏனைய கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற இ.தொ.கா. இ.தே.தோ.தொ சங்க கூட்டில் இருந்து வெளியேறி முன்னைய அரசுக்குள் இருந்து வெளியேறி இந்த புதிய அரசுக்கு விசுவாசமாக வந்துள்ள திகாம்பரம், இராதாகிருஸ்னணுடன் உண்மையான ௬ட்டை ஏற்படுத்தி நியாயமான சம்பள உயர்வினை பெற்றுக்கொடுங்கள்.
டக்ளஸ் தேவானந்தாவின் மறு பகுதியாக தமிழ் மக்களிடம் காட்டாதீர்கள். உங்கள் அனுபவம், திறமையை மலையக மக்களின் உயர்விற்கு பயன்படுத்தினால் நிச்சயம் அம் மக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
மஹா