ஆசிரியர் தலையங்கத்தை வாசித்து இரசிக்க வேண்டுமானால் வலம்புரிதான் இதற்குரிய பத்திரிகை என வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் புகழாரம் சூட்டியுள்ளார்.
வலம்புரி நாளிதழின் 18ஆவது அகவை நிறைவையொட்டி அவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியி லேயே மேற்கண்டவாறு புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியில்,
“நடுவுநிலை தவறா நன்னெறி காக்கும் நாளிதழ்” என்னும் இல ட்சிய வாசகத்துடன் பத்திரிகைத் துறையில் பதினெட்டு ஆண்டு களை நிறைவு செய்து பத்தொன்ப தாவது ஆண்டில் கால் பதிக்கும் வலம்புரி- சங்குநாதத்தை வாழ்த்துவதில் பெரு மகிழ்வடைகின்றேன்.
இக்காலப் பகுதியில் வலம்புரி -சங்குநாத த்தின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. தன் இனிய தமிழால் வாசகர்கள் அனைவரையும் கவ ர்ந்திருக்கின்றது. அன்றாட உள்நாட்டு, உல கச் செய்திகளுடன் அறிவு ரீதியான பல ஆரா ய்ச்சிக் கட்டுரைகளும் பரீட்சை வழிகாட் டலும் ஆன்மிக ரீதியான சிந்தனைகளும் சிறப்பாகத் தாங்கி வெளிவருவது பாரா ட்டுக்குரியது.
அரசியலையும் ஆன்மிகத்தையும் இதிகாசத்தையும் பொருத்தமான விகி தத்தில் கலந்து படைக்கும் வலம்புரியின் ஆசிரியர் தலையங் கங்கள் நயக்கவும் சிலவேளை வியக்க வும் வைப்பன.
ஆசிரியர் தலையங்கம் வாசித்து இரசிக்க வேண்டுமானால் வலம்புரிதான் அதற் குரிய பத்திரிகை எனும் கருத்து யாழ்ப்பாணத்தின் வாச கர் மனங்களில் பதியமிடப்படும் வகை யில் எளிமையாகவும் நேரடியாகவும் கனகச்சிதமாகவும் ஒரே மூச்சில் வாசிக்
குமளவுக்கு கவர்ந்திழுத்து விலகவிடாமல் வைத்திருக்கும் காந்தமாக ஆசிரியர் தலையங்கங்கள் வலம்புரியை வளப்படுத்துகின்றன.
பத்திரிகை தர்மத்தின் வழி நின்று தனது இலட்சிய வாசகமான நடுவுநிலை தவறா நன்னெறி காக்கும் நாளிதழ் அடிப்படையில் வாசக மனங்களை மாண்புடன் வழிநடத்தும் பண்பு வலம்புரியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது.
எனவே இந்நன்னாளில் வலம்புரியின் பிரதம ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், அலுவலகச் செய்தியாளர்கள், பிரதேச செய்தியாளர்கள், பணியாளர்கள் எல்லோருக்கும் மேலாக வலம்புரி வாசகர்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு தொடர்ந்து உங்கள் அர்ப்பணிப்பான பணி வெற்றிகரமாக நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர்,
வடக்கு மாகாணம்.