எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி பொன்ராசா களமிறங்குகின்றார். வலி.மேற்கு பிரதேச சபைக்கு தமிழர் சம உரிமை இயக்கத்தின் சார்பில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் அவர் களம் இறங்குகின்றார்.
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவ தலைவரான அவர் நெருக்கடிகள் மிக்க காலப்பகுதியில் யாழ்.தினக்குரல் நாளிதழின் செய்தி ஆசிரியராக பணியாற்றியருந்தார்.கடத்தல்கள் மற்றும் கொலைகள் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட காலத்தில் அவரது பணி சிறப்புமிக்கதாக இருந்தது.
அவரது சகபாடிகள் பலர் கொல்லப்பட்டபோதும் ,ஊடக நிறுவனம் தாக்குதல்களிற்கும் உள்ளாகியிருந்தது.
அதனை தாண்டி பணியாற்றி பொன்ராசா பல தடைவ தாக்குதல் முயற்சிகளிலிருந்து தப்பித்துமிருந்தார்.
இதனிடையே தமிழ் தேசிய பேரவை எனும் மக்கள் இயக்கத்தின் பங்காளிகளாக இந்த முறை உள்ளூராட்சி தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் களமிறங்கும் வேட்பாளர்களின் விபரங்களை வலிவடக்கு வலி தென்மேற்கு மற்றும் சாவகச்சேரி பிரதேசசபை ஆர்வலர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
கறைபடியாத நேர்மையான கரங்களை உடைய, ஆக்கமும் துடிப்பும் மிக்க இளைஞர்களை உள்ளடக்கிய குழாம் ஒன்று களம் இறங்குகிறது.
வெளிப்படைத்தன்மையான தேசிய நோக்குள்ள அரசியல் தலைமையோடு, பதவிநலனை பாராது கொள்கைக்காகவே இணைந்து பணிபுரிய முன்வந்திருக்கும் அவர்களை பல தரப்புக்களும் பாராட்டிவருகின்றன.
இதனிடையே பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறயுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் இம்முறை 243 வட்டாரங்களில் 4,68476 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என்.அகிலன் தெரிவித்துள்ளார்.
மொத்த உறுப்பினாகளின் எண்ணிக்கை 453 பேர்கள்,இதில் பெண்களின் எண்ணிக்கை 133 ஆக இருக்கவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.