விகாராதிபதியின் உடலை யாழ்.முற்றவெளியில் தகனம் செய்ய நீதிமன்றம் அனுமதி !

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகா ரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ். முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெ டுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி பொது மகன் ஒருவரால் தாக்கல் செய்யப்ப ட்ட வழக்கில் எதிராளிகள் ஐவரையும் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ். நீதி வான் நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது.

குறித்த நாக விகாரையின் விகாரதிபதி மேகாஜதுரே ஜானரத்ன தேரர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது உடலினை இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்வதற்கு யாழ்.இராணுவ படைத் தலமையகம் ஆரியகுள நாக விகாரையினருடன் இணைந்து ஏற்பாடுகளை ஆரம்பித்து ள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநா ட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென  கோரி பொது மகன் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கானது இன்று நண்பகல் 12.30 மணியளவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இவ் வழக்கின் இடை நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரனையின் போது குறித்த வழக்கின் எதிராளிகளான யாழ்.மாநகர சபை ஆணையாளர், யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர், யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதகர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, ஆரியகுள நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் கட்டளை பிறப்பித்திருந்த நிலை யில் அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்குத் தொடுநர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் சிரேஷ்ட சட்ட த்தரணியுமான சாந்த அபிமன்யூ தலைமையில் 12 சட்டத்தரணிகள் முன்னி லையாகி உள்ளனர். 
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விகாராதிபதியின் உடல் எரிக்கப்படும் இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான இடமெனவும் அங்கு விகாராதிபதியின் உடலை எரிப்பதற்கு அத் திணைக்கள த்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் இறுதிக்கிரியைகளை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் மன்றில் முன்னிலையாகியிருந்த பொலிஸ் அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பால் குறித்த பகுதியில் யாழ்.கோட்டை தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத் தூபி, பொது நூலகம், பொதுச் சந்தை மற்றும் முனீஸ்வரர் ஆலயம் என்பன உள்ள நிலையில் எரிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கையை நிராகரித்த நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன், விகாராதிபதியின் உடலை அங்கு தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila