கூட்டமைப்பு உறுப்பினர்கள் 2கோடி வாங்கியது உண்மை சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு


தமிழ் மக்களின் நலன்களை பாராமல் அரசின் தேவைகளை பூர்த்தி செய்தமையால் தான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கூட்டமைப்பின் அழுத்தத்தால் இடம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தி ற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அரசாங்கம் 2 கோடி ரூபா வழங்கப்பட்டது என கூட்டமை ப்பு நாடளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற த்தில் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் அப்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை. தற்போதைய குறித்த விட யம் ஊடகங்களில் வெளியானதை தொடந்து ஒவ்வொருவரும் அது பொய் என கூற ஆர ம்பித்துள்ளனர்.

குறித்த 2 கோடி ரூபா அபிவிருத்திக்கா கவே வழங்கப்பட்டதாகவும், அந்த நிதியில் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் என்ன என்ன என்பது தொடர்பில் வெளிப்ப டுத்தியும் வருகின்றனர். அபிவிருத்திக்காக வழங்கப்பட்டிருந்தால் அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டி ருக்க வேண்டும்.
ஆனால் வரவு செலவு திட்டத்திற்கு ஆத ரவு வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தனை தவிர்த்து ஏனைய நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டு ள்ளது. ஆகவே 2 கோடி வழங்கப்பட்ட நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அரசின் தேவை களை ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்து ள்ளனர். அதனால் தான் அரசு இவர்களுக்கு மேலதிகமான நிதியை வழங்கியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு இப்போது முன்வைக் கப் படவில்லை. நாடாளுமன்றத்திலேயே இது கூறப்பட்டது. எனினும் அப்போது எதனை யும் கூறாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது அது பொய் என வரிந்து கட்டிடுக் கொண்டு நிற்பதற்கான காரணம் என்ன? மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அரசிடமிருந்து பணம் வாங்கவில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

நான் யாருக்கும் கை உயர்த்தியோ? அல் லது எமது மக்களுக்கு துரோகம் செய்தோ யாரிடமும் பணம் பெறவில்லை. எனது கோப் பாய் தொகுதியில் எனது மக்களுடைய தேவை கள் அடங்கிய கடிதம் ஒன்றை பிரதமரிடம் கொடுத்திருந்தேன். அந்த கடிதத்தில் குறிப்பிட ப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி தருமாறு பிரதமருக்கு நெருக்குதல் கொடுத்திருந்தேன்.

அதனை தொடந்தே எனது திட்டங்களு க்கு 4 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. இவை பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமல் கஜதீபன் சிறுபிள்ளை தனமாக பேசுவதை நிறுத்த வேண்டும். மேலும் தற்போது உள் @ராட்சி தேர்தலை மையமாக வைத்து தமி ழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு பொய் கூற ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிக ளின் விடுதலைக்கு தாம் தான் காரணம் என வும், காணி விடுவிப்பும் தம்மால் தான் நடை பெறுகின்றது எனவும் கூறி வருகின்றனர்.

அரசியல் கைதிகளுடைய விடுதலை கூட் டமைப்பின் அழுத்தத்தால் இடம்பெறவில்லை. வழமையாக எவ்வாறு ஒரு கைதி சட்டதிட்ட ங்களுக்கு உட்பட்டு விடுதலை செய்யப்படுகி ன்றாரோ அவ்வாறே விடுதலை செய்யப்படு கின்றனர். இப்போதும் இராணுவத்தின் வசம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி கள் உள்ளன. இந்த நிலையில் வழமை போன்று கூட்டமைப்பினர் மக்கள் முன்பு பொய் கூற ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும். உள்@ராட்சி தேர் தல் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பி னர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபன மும் மக்களை ஏமாற்றும் வகையிலேயே உள்ளன. யாழ்.மாநகர சபையை பழைய இட த்திலேயே கட்டவுள்ளதாக கூறியிருக்கின்றா ர்கள். இது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. யார் ஆட்சிக்கு வந்தாலும் பழைய இடத்தில் யாழ்.மாநகர சபை கட்டப்படத்தான் போகின்றது.

குறிப்பாக ஒரு விடயத்தை இங்கு குறி ப்பிட வேண்டும். தற்போது இலஞ்ச குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னர் மாறி மாறி கருத்துக்களை கூறி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுன்னாகம் கழிவெண்ணை பிரச்சினையின் போது ஒருத்தரும் வாய் திறக் காமைக்கான காரணம் என்ன? குறித்த எண்ணெய் கலப்புக்கு காரணமான நிறுவ னம் வடக்கிற்கு வருவதற்கான காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் தான். ஆகை யால் தான் ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. இதே போன்றுதான் ஐஸ்கிறீம் பிரச்சினையி லும் நடந்து கொண்டார்கள். ஆகவே மக்கள் இவற்றை கவனத்திலெடுத்து செயற்பட வேண்டும் என்றார்.     
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila