எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில வாக்கெண்ணலில் இம்முறையும் ஓட்டுமாட்டுக்களினை செய்ய தமிழரசுக்கட்சி தேர்தல் திணைக்களத்துடன் தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வெற்றிபெற்றிராத மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் பின்னர் விருப்ப வாக்களிப்பின் போது வெற்றிபெற வைக்கப்பட்டிருந்தனர்.அத்துடன் ஈ.சரவணபவனும் வெற்றி பெற வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலின் போதும் வாக்கெண்ணும் பணியின் போது அதே ஓட்டுமாட்டுக்களினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
உள்ளுராட்சி சபை தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகளை எண்ண திட்டமிடப்பட்டுள்ளது.எனினும் எண்ணப்பட்ட பின்னர் முடிவுகள் அங்கேயே அறிவிக்கப்படுமாவென்பது தொடர்பில் இது வரை தேர்தல் திணைக்களம் முடிவெதனையும் தெரிவித்திருக்கவில்லை.
இத்துடன் விகிதாசார வாக்குகள் மற்றும் அதன் ஆசனங்கள் தொடர்பிலும் தகவல்கள் இல்லை.
இந்நிலையில் தேர்தல் கள நிலவரங்கள் இம்முறை தமிழரசுக்கட்சிக்கு ஆதரவாக இல்லாத போதும் சுமந்திரன் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ள கருத்துக்கள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் இதே நம்பிக்கையுடன் சுமந்திரன் கருத்துக்களினை முன்வைத்திருந்தார்.
இலங்கை அரசினைப்பொறுத்தவரை உத்தேச அரசியல் யாப்பிற்கான ஆதரவாக வடகிழக்கு வாக்களிப்பினை பார்க்கின்ற நிலையில் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வெற்றி அதற்கு தேவையாக உள்ளது.
இதனால் இம்முறை வாக்கெண்ணுவது தொடர்பாக கருத்துக்களினை தெரிவிக்காது அமைதி காத்துவரும் தேர்தல் திணைக்களம் இம்முறையும் ஓட்டுமாட்டுக்களை செய்ய முற்படலாமென்ற சந்தேகம் பலரிடமும் எழுந்துள்ளது.