உன்னை உள்ளதூக்கி போடப்போறம்-தமிழரசு வேட்பாளர்(ஒலிப்பதிவு ஆதாரம்)

தமிழரசுக்கட்சி வேட்பாளர்களது அடாவடித்தனம் 
நாள் தோறும் உச்சமடைந்துவருகின்றது. தனது முறைகேடுகள் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவரது வயோதிப பெற்றோரை பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் மூலம் மிரட்டிய வேட்பாளர் ஒருவர் பற்றிய தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

உனது முகநூல் பதிவுகளை தொடர்ந்து எங்கள் கட்சிக்கார லோயர்மார் களத்தில் இறங்கிட்டினம் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது எந்த பின்புலமும் இல்லாமல் நான் அரசியலுக்கு வந்திருக்கமாட்டன் உன்னை உள்ள தூக்கி போடுவம்பார் என மிரட்டிய ஆதாரம் கிடைத்துள்ளது.

நல்லூர் கல்வியங்காடு பகுதியினை சேர்ந்த சமூக செயற்பாட்டளர் ஒருவர் தான் தொழில் நிமித்தம் தங்கியிருக்கும் சிங்கப்பூரிலிருந்து குறித்த தமிழரசுக்கட்சி வேட்பாளரது கடந்த கால ஊழல் மோசடிகள் பற்றி அம்பலப்படுத்தி வந்திருந்தார்.



இதனால் குறித்த தமிழரசுக்கட்சி வேட்பாளரது போலி முகத்திரை கிழிந்ததையடுத்து அவசர அவசரமாக தனது நண்பர்களான பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் மூலம் குறித்த செயற்பாட்டாளரது வயோதிப பெற்றோரை மிரட்டியமை அம்பலத்திற்கு வந்துள்ளது. தன்னை பற்றி சமூக ஊடகங்களில் செய்திகளை பிரசுரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டுமென வலியுறுத்தியே அவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரிலுள்ள குறித்த நபர் வீடு சென்று மிரட்டியவர்களுடன் தொடர்புகொண்டபோது எங்களிடம் பலம் இருக்கிறது. நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிப்போம் என மிரட்டியாத குறிப்பிட்டுள்ளார். 

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila