நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலால் தான் கடுமையான வேதனையடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய கவலை தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடி தொடர்பிலான 1400 பக்கங்களை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி அது குறித்து விவாதம் இடம்பெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, அமளிதுமளி ஏற்பட்டது.
வாய்த்தர்க்கம் திடீரென கைகலப்பாக மாறியது. நாடாளுமன்றத்தின் நடுப்பகுதிக்கு வந்த ஆளும் மற்றும் எதிர்க் கட்சியினர் மோதிக் கொண்டனர்.
இதன் போது உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்து நாடாளுமன்ற ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த மோதலையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார். இதன் பின்னர், மோதல் குறித்து விசாரித்த குழு, இந்த மோதல் முன்னரே திட்டமிடப்பட்டது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற மோதல் குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர், இந்த மோதல் சம்பவம் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.
உலகளவில் இலங்கை நாடாளுமன்றம் சிறப்பானதொரு நிலையில் இருக்கின்றது. ஆனால் கடந்த 10ம் திகதி நடந்த மோதல் பெரும் வேதனையளிக்கிறது.
இந்த மோதல் தொடர்பிலான முழுமையான அறிக்கை எனக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் சமர்பித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Add Comments