தமிழர்களை ஒன்றிணைப்பதில் வெற்றிகண்ட உலகப் பேரியக்கம் மீண்டும் யாழில்!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையக ஒன்றியங்களின் ஆதரவுடன் 13வது உலக மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு, உலகத் தமிழ் இனத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்கும் உயர் நோக்கத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவில் வாழும் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்னும் குறிக்கோளுடனும் இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்னும் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இந்த இயக்கம் இயங்கி வருகின்றது. இது 4ஆவது உலகத் தமிழாராட்சி மாநாட்டின்போது தோற்றுவிக்கப்பட்டது.
தமிழ் மொழியினை மறந்து போனவர்களைத் தாய்மொழி தமிழ் உணர்வுக்குக் கொண்டுவரும் நல்நோக்குடனும் 1974ஆம் ஆண்டு 08.01.1974 அன்று இலங்கை கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு 2016 இல் எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்கு ஒரு ஆரோக்கிய ஆரம்பமாக இந்திய மண்ணின் புதுவை மாநிலத்தில் உள்ள பாண்டிச்சேரி தலைநகரில் இடம்பெற்றது.
இரண்டு நாள் சிறப்பாக இடம்பெற்ற மாநாடு அனைத்துலக இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவர்க்கும் உற்சாகம் தரும் செயற்பாடாக அமைந்துள்ளது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு இலங்கையில் இயக்கம் தோன்றிய யாழ் மண்ணில் நாடத்தப்படவேண்டும் என அங்கு முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடைபெறவுள்ளது.



Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila