முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸமீது குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சமாதானப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆறு பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்தக் குழுவினருடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான மூன்று நாடுகள் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உள்ளதாகவும், மஹிந்த யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதாகவும் இதனால் தாம் தர்மசங்கடமான ஓர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரண்டு தரப்பிற்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய சந்திப்பின் போதும் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாது என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து கட்சியை வெற்றிப்பாதைக்கு இ;ட்டுச் செல்ல முடியும் என ஆறு பேர் அடங்கிய குழுவினர் தெரிவித்திருந்தனர்.
எனினும், ஜனாதிபதி அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் காலங்களில் இந்தக் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படுவது சாத்தியமா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டு உள்ளது.