நண்பர்களாக இருந்தாலும், பிரகீத் எக்னலிகொட உட்பட பலரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியவர்களை பாதுகாக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால மைத்திரிபால சிறிசேனவிடம் சந்தியா எக்னலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.
|
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் உண்மையை வெளிக்கொண்டுவந்து, அவர்களுக்கு நியாயத்தை வழங்குவதாக கூறியே மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ள சந்தியா எக்னலிகொட, எனினும் தற்போது அந்த வாக்குறுதியை ஜனாதிபதி மைத்ரிபால மறந்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
'தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இந்த வழிபாடுகளில் பங்கேற்றிருந்தனர். பிரகீத்தை பறித்தெடுத்த ராஜபக்சக்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது என்றே நான் நினைக்கின்றேன். அவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்றி, சித்த சுவாதீனம் நிலையை எட்டியுள்ளனர். அதேவேளை கோட்டாபய இன்று ஸ்ரீலங்காவில் இல்லை.நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
குற்றமிழைத்த இராணுவத்தினர் உண்மையை மறைக்கின்றனர். அவர்களுக்கு வெவ்வேறு தண்டனை கிடைத்துள்ளது. காளியம்மனின் அனுகிரகத்தால் தான் அந்த விடயங்கள் நடைபெற்றன.கடந்த காலங்களில் காளியம்மனிடம் பல்வேறு வேண்டிதல்களை செய்திருந்தேன். எனினும் எமக்கு இதுவரை உண்மை தெரியவரவில்லை. இவர்கள் இதுவரை உண்மையை சொல்லவில்லை. இந்த மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துங்கள்.குற்றமிழைத்தவர்களுக்கு இதனை விட அதிக தண்டனை கிடைக்க வேண்டும்.
அதற்காகவே இன்று காளியம்மனுக்கான வழிபாடுகளை செய்கின்றோம். நான் அரசாங்கத்திற்கு ஒன்றைக் கூறுகின்றேன். விசேடமாக புதிய ஜனாதிபதிக்கு ஒன்றைக் கூறுகின்றேன். உண்மை மற்றும் நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக கூறியே நீங்கள் அதிகாரத்திற்கு வந்தீர்கள்.இன்று அந்த விடயம் மறந்துபோன ஒன்றாகவே காணப்படுகின்றது.
முதலாவதாக என்ன விடயத்திற்காக நீங்கள் அதிகாரத்திற்கு வந்தீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.அது உங்களுக்கும் சாபமாக அமையும். அதனால் எமக்கு நியாயத்தைப் பெற்றுத்தாருங்கள். இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை வெளியிடுங்கள்.நண்பர்களை பாதுகாக்க வேண்டாம் என்பதையே கோருக்கின்றோம்.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|
காணாமல் ஆக்கியவர்களை பாதுகாக்க வேண்டாம்! - ஜனாதிபதியிடம் சந்தியா கோரிக்கை
Add Comments