குறிப்பிட்ட விமானத்துடனான தொடர்புகள் இன்று காலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுரபாயோவிற்கும், சிங்கப்பூரிற்கும் இடையிலான ஜாவா கடற்பகுதிக்கு மேலாகவே குறிப்பிட்ட விமானம் காணமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விமானம் காணமல்போவதற்கு முன்னர் வழமைக்கு மாறான பாதையில் பயணிப்பதற்கான அனுமதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஹடி முஸ்தப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் பாகம்:-
மாயமான ஏர்ஏசியா விமானம் பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என ஆய்வு நடைபெற்று வருகிறது.
மூன்றாம் பாகம்:-
இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இன்று அதிகாலை சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது.
விமான கட்டுப்பாட்டு மையத்துடன் விமானத்தின் தொடர்பு விடுபடுவதற்கு முன், தனது வழக்கமான பாதையில் போவதை விட்டு, வேறு பாதையில் போக அனுமதி கோரப்பட்டதாகவும், அப்போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே 32000 அடி உயரத்தில் பறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.