இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கலாச்சார மண்டபத்தை அடுத்த ஆண்டிலும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்துவைப்பாரென இடமாற்றம் பெற்று செல்லும் இந்திய துணைதூதரக அதிகாரி நட்ராஜன் தெரிவித்துள்ளமை வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணசபையின் ஆயுட்காலம் ஜப்பசியுடன் முடிவுக்கு வரவுள்ளது.இந்நிலையில் 2019ம் ஆண்டினில் புதிய சபை பொறுப்பேற்கவுமுள்ளது.மாவை சேனாதிராசா முதல் சீ.வீ.கே.சிவஞானம் வரை அடுத்த முதலமைச்சர் கனவிலிருக்கு இந்திய மீண்டும் முதலமைச்சராக விக்கினேஸ்வரனை விரும்புகின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று யாழப்பாணத்தில் நடைபெற்ற நட்ராஜனின் விருப்பமானவர்களிற்கான விருந்தில் முதலமைச்சர் பேசுகையில் நட்ராஜன் கடந்த மூன்று ஆண்டுகளில் வடபகுதி தமிழ் மக்களுக்கு ஆற்றியபணிகள் அளப்பரியன. ஆவரை நாம் நினைவுகூரக்கூடிய வகையில் ஒரு விசாலமான கலாச்சார மண்டபம் உருவாக்குவதற்கான திட்டங்களைத் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன் கட்டடவேலைகள் 2018ற்குள் முடிவடைந்துவிடும் எனத்தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான மண்டபத்தை எமக்கு பெற்றுத்தருவதற்கு மூல காரணமாக இருந்த நடராஜன் அதனை வைபவ ரீதியாக திறந்து வைப்பதற்கு முன்பதாக இடமாற்றம் பெற்று டெல்கி தலைமைச் செயலகத்தை நோக்கி பயணிக்கவிருப்பது சற்று வருத்தத்தைத் தருகின்றது. எனினும் இம் மண்டபம் திறப்புவிழா நடைபெறும் காலத்தில் நடராஜன் விசேட அதிதியாக கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பிப்பார் என்று எண்ணுகின்றேன்.