தீர்வு காணக்­கூ­டியவர்களுக்கு வாக்­கு­களை அளி­யுங்­கள்! - யாழ். மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­கு­ழு­


இதய சுத்­தி­யு­டன் விடா­மு­யற்­சி­யு­ட­னும் செயல்­பட்டு மிக­வி­ரை­வில் தீர்வு காணக்­கூ­டிய கட்­சி­யையோ, குழு­வையோ இனம் கண்டு அவர்­க­ளுக்கு உங்­கள் வாக்­கு­களை அளி­யுங்­கள் என யாழ்ப்­பா­ணம் மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­கு­ழு­வின் சார்­பில் அதன் தலை­வர் அருட்­திரு எஸ்.வி.பி.மங்­க­ள­ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதய சுத்­தி­யு­டன் விடா­மு­யற்­சி­யு­ட­னும் செயல்­பட்டு மிக­வி­ரை­வில் தீர்வு காணக்­கூ­டிய கட்­சி­யையோ, குழு­வையோ இனம் கண்டு அவர்­க­ளுக்கு உங்­கள் வாக்­கு­களை அளி­யுங்­கள் என யாழ்ப்­பா­ணம் மறை­மா­வட்ட நீதி சமா­தான ஆணைக்­கு­ழு­வின் சார்­பில் அதன் தலை­வர் அருட்­திரு எஸ்.வி.பி.மங்­க­ள­ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
உள்­ளூர் அதி­கார சபை­யின் முக்­கி­ய­மான பொறுப்பு நகர கிராம உட்­கட்­ட­மைப்பு, மக்­க­ளின் வேலை வாழ்­வா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­தல், மக்­க­ளின் நலன் சார்ந்த திட்­டங்­களை வகுத்­த­லும் செயல்­ப­டுத்­தல் போன்­ற­வை­யாக இருந்­தா­லும் தற்­போ­தைய நிலை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் பிரச்­சினை, காணிப் பிரச்­சினை, அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் ஆகிய பிரச்­ச­னை­கள் இன்­றும் பூதா­கா­ர­மாக உள்­ளன. கடந்த ஒரு வரு­ட­மாக இவற்­றால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் நடத்­தி­வ­ரும் அமை­திப்­போ­ராட்­டம் கண்­டு­கொள்­ளப்­ப­டா­மையே நீடிக்­கின்­றது. எனவே இந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட்­டால் தான் நல்­லி­ணக்­க­மும், அபி­வி­ருத்­தி­யும் ஏற்­ப­டும்.
எனவே இவை சம்­பந்­த­மாக இதய சுத்­தி­யு­டன் விடா­மு­யற்­சி­யு­ட­னும் செயல்­பட்டு மிக­வி­ரை­வில் தீர்வு காணக்­கூ­டிய கட்­சி­யையோ, குழு­வையோ இனம் கண்டு அவர்­க­ளுக்கு உங்­கள் வாக்­கு­களை அளி­யுங்­கள்.
ஒரு நாட்­டின் குடி­மக்­க­ளின் அடிப்­படை உரி­மை­க­ளி­லொன்று வாக்­கு­ரிமை. இத­னைப் பொறுப்­பு­டன் நிறை­வேற்­று­வது குடி­மக்­க­ளது சமூ­கப் பொறுப்­பும் கட­மை­யு­மா­கும்.இடம்­பெ­ற­வி­ருக்­கும் உள்­ளூர் அதி­கா­ர­ச­பைத் தேர்­த­லில் வாக்­கு­ரி­மை­யுள்ள ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது வாக்­கு­க­ளைப் பொறுப்­பு­டன் அளிக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கி­றோம். புதிய உள்­ளூர் அதி­கா­ர­ச­பைத் தேர்­தல்­கள் சட்­டத்­தில் இது­வரை இருந்­து ­வந்த விருப்பு வாக்­கு­முறை இரத்­தா­கின்­றது.
அத்­து­டன் பெண்­க­ளுக்­காக 25வீதப் பிர­தி­நி­தித்­து­வம் உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­னைய சந்­தர்ப்­பங்­க­ளில் பல்­வேறு தேர்­தல்­க­ளி­லும் பெண்­க­ளுக்­குக் கூடு­தல் பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கப்­பட வேண்­டு­மென்று பல்­வேறு மட்­டங்­க­ளி­லும் பேசப்­பட்­ட­ போ­தும் நடை­மு­றை­யில் பெண்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வம் மிக­வும் குறை­வா­ க­வே­யி­ருந்து வந்­துள்­ளது.
தற்­போது பெண்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வம் திருத்­தப்­பட்ட சட்­டத்­தின் படி 25வீதம் (அதற்கு மேலும் இருக்­க­லாம்) ஆக உறுதி செய்­யப்­பட்­டமை வர­வேற்­கப்­ப­ட வேண்­டிய விட­யம். எனவே வாக்­க­ளிக்­கும் போது பொருத்­த­மான பெண்­களை வேட்­பா­ளர்­க­ளாக முன்­னி­றுத்தி அவர்­க­ளது கணி­ச­மான பங்­க­ளிப்பை உறு­தி­செய்­யும் அர­சி­யல் கட்­சி­க­ளை­யும், சுயேச்­சைக் குழுக்­க­ளை­யும் இனம் காண்­ப­தும் நல்­லது.
கொள்­கை­யில் உறு­தி­யான, மக்­கள் நல­னில் குறிப்­பா­கப் பாதிக்­கப்­பட்ட, பல்­வேறு தேவை­க­ளை­யு­டைய மக்­கள் பணி­யில் இது­வ­ரை­யில் அர்­ப­ணிப்­பு­ட­னும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­ட­னும் பணி­யாற்றி அவர்­க­ளுக்­கா­கப் பல்­வேறு மட்­டங்­க­ளி­லும் குரல்­கொ­டுத்து வந்­த­வர்­களை இனம் கண்டு அவர்­க­ளுக்கு உங்­கள் வாக்­கு­களை வழங்­குங்­கள்.
நீங்­கள் உங்­கள் வாக்­கு­ரி­மை­யைப் பயன்­ப­டுத்­தாது விட்­டால் மக்­க­ளுக்­குக் குறிப்­பா­கப் பல்­வேறு வழி­க­ளில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­குப் பணி­யாற்­றக் கூடிய மிக­வும் பொருத்­த­மான வேட்­பா­ளர்­கள் தேர்ந்­தெ­டுக்­க­ப்ப­டா­மல் போக­லாம் என்­பதை மன­தில் கொள்­ளுங்­கள்.
தேர்­தல் திணைக்­க­ளத்­தா­லும், பவ்­ரல் போன்ற தேர்­தல் கண்­கா­ணிப்பு அலு­வ­லத்­தா­ லும் வெளி­யி­டப்­ப­டும் இந்தத்­தேர்­தலுக்கான அறி­வு­றுத்­தல்­க­ளுக்­கேற்ப உங்­கள் வாக்­கு­களை அளி­யுங்­கள் என்­று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila