தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இணைவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “ நாம் நான்கு கட்சிகள் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்தான் இருந்தோம். தமிழ் அரசுக் கட்சியில் இருக்கவில்லை. அந்தக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தோமே தவிர, அந்தக் கட்சியில் இணையவில்லை.
|
நான் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நேரம் கோரியபோது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசித்தான் முடிவெடுக்க முடியும் என்று இரா.சம்பந்தனின் இணைப்புச் செயலர் தெரிவித்தார்.எமது கட்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது. நான் 4 தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு நேரம் ஒதுக்காமல் விடுவது என்பது வன்னி மக்களின் குரல்வளையை நெரிப்பதற்குச் சமனானது.
கூட்டமைப்பில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் தங்களின் சுயாதீன தன்மையை பேணிக் கொள்ளலாம் என்று இரா.சம்பந்தன் அடிக்கடி கூறுபவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து இவர்கள் விலகிப் போய்விட்டார்கள்.
இந்த நிலையில் இவர்களுடன் நாம் சேருவது சாத்தியமே இல்லாதது. நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித் தனியாக நேரம் ஒதுக்குவதில்லை. கட்சிகளுக்குத்தான் நேரம் ஒதுக்கப்படும். இவர்கள் எனக்கு நேரம் தரவில்லை என்றாலும், எனக்குப் பேசுவதற்கு நேரம் எடுப்பது எப்படி என்பது தெரியும்.
நான் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையைப் பயன்படுத்துவேன். அனைவருக்கும் சமனான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்குரியது. அவரிடம் நான் முறையிட்டுள்ளேன் என்றார்.
|
மீண்டும் கூட்டமைப்பில் இணையும் சாத்தியம் இல்லை! - சிவசக்தி ஆனந்தன்
Related Post:
Add Comments