சமஷ்டி முறையில் ஆட்சி அமைக்கப்பட்டால்தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை எட்டமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய கூட்டு அரசு இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என நம்பிக்கை வெளியிட்ட வடக்கு முதல்வர், இணைந்த அரசு பிரிவதற்கு சர்வதேச நாடுகள் இடமளிக்காது எனவும் குறிப்பிட்டார்.
யாழில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முதலமைச் சரிடம் ஊடகவியலாளர்கள் தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கொள்கை அடிப்படையில் தமிழர்களின் விடிவுக்காக எமது பிரதிநிதிகள் ஒன்றி ணைய வேண்டும். தெற்கில் தற்போது ஏற்ப ட்டுள்ள அரசியல் மாற்றங்களில் பிறநாடுக ளின் உள்ளீடுகளும் இருப்பதாக தெரிகின் றது. அதனால் தற்போதுள்ள அரசாங்கம் பிளவு பட அவர்கள் விரும்ப மாட்டார்கள் எனும் தோற்றம் உள்ளது. அதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த அரசாங்கம் தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு ஆட்சியில் இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.
தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங் கள் கூடியளவில் தமிழ் மக்களின் பிரச்சி னையை தீர்க்கவும் உதவலாம். அல்லது தமிழ் மக்களை ஒதுக்கி வைக்கவும் முயல லாம். எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடு க்கப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
அத்துடன் நாட்டில் உள்ள ஒன்பது மாகா ணங்களிலும் சமஷ்டி முறையிலான ஆட்சி அமைக்கப்பட்டால் இனப்பிரச்சினைக்கு நிர ந்தர தீர்வினை எட்ட முடியும் என நம்புகின் றேன்.
நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களி லும் ஏன் சமஷ்டி ஆட்சி அமைக்க கூடாது என கருத்தை முன் வைத்துள்ளேன். 13ஆம் திருத்த சட்டத்தை வடக்கு கிழக்கு மாகாண ங்களுக்கு கொண்டு வந்த போது , ஜே.ஆர் ஜெயவர்த்தன அதனை முழு நாட்டுக்கும் ஏற் புடையதாக செய்தார்.
அதேபோல் ஒரு சமஷ்டி அரசியல் யாப்பை முழு நாட்டுக்கும் கொண்டு வந்தால் நல்ல அரசியல் தீர்வு கிடைக்கும் என எண்ணுகி றேன். அது தொடர்பில் சிங்கள கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதனை பொறுத்தே ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட முடி யும் என அவர் மேலும் தெரிவித்தார்.