தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இன்று பிற்பகல் நடந்த அமர்வில், நகரசபை தவிசாளர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சிவமங்கை இராமநாதனின் பெயரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யோகேஸ்வரன் ஜெயக்குமரனும் போட்டியிட்டனர்.
இதில், 12 வாக்குகளைப் பெற்ற சிவமங்கை இராமநாதன் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். யோகேஸ்வரன் ஜெயக்குமரன் 6 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.
சாவகச்சேரி நகரசபையில், முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சயந்தனின் ஆதரவு பெண்மணியான சிவமங்கை இராமநாதன் போட்டியிட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக ஈபிடிபி,ஜக்கிய தேசியக்கட்சி,சுதந்திரக்கட்சி மற்றும் வரதராஜப்பெருமாளின் சுயேட்சைகுழு ஆதரவளித்திருந்தன.
இதனிடையே இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருந்தவபாலன் ஆதரவு இளைஞனரொருவனை பதவியிலிருந்த ராஜினாமா செய்ய கேசவன் சயந்தன் பணித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இதனையடுத்து இன்றைய சபை கூட்டத்தின் பின்னர் தனது பதவியிலிருந்து விலகிச்செல்ல குறித்த இளம் உறுப்பினரான சுதர்சன் என்பவர் முன்வந்துள்ளார்.
இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதன் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களே வாக்களித்திருந்தனர்.