உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்; கூட்டமைப்பு தொடர்பில் விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்!


viky

இந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தமிழ் அர­சுக் கட்­சி­யை­யும் அதன் தலை­மை­க­ளை­யும் தம்­மைத்­தாமே கேள்வி கேட்க வேண்­டிய ஒரு நிலைக்­குத் தள்­ளி­யுள்­ளது. அசைக்­க­ மு­டி­யாது என்­றி­ருந்­த­வர்­கள் நில­ந­டுக்­கத்தை அனு­ப­வித்­துள்­ளார்­கள். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.
அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். அதில் உள்­ள­தா­வது-,
எமது உரி­மை­களை, உரித்­துக்­களை தொடர்ச்­சி­யாக ஆணித்­த­ர­மாக எமது புலம்­பெ­யர் மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளை­யும் முன்­வைத்து அர­சி­டம் நீதி­யா­ன­வற்றை, நியா­ய­மா­ன­வற்­றைப் பெற்­றுக் கொள்­வ­தில் எவ்­வித சம­ர­சத்­துக்­கும் இடம் கொடுக்­கா­மல் தீர்க்க தரி­ச­னத்­து­டன் செயற்­பட்­டி­ருந்­தால் தெற்­கில் யார் வந்­தா­லும் எம்­ம­வர் பயப்­ப­டத் தேவை­யி­ருந்­தி­ருக்­காது.
சுய­ந­லன் தரக்­கூ­டிய வெளி­நாட்டு உள்­ளீ­டல்­க­ளால் மக்­க­ளு­டன் கலந்­தா­லோ­சி­யாது பல­விட்­டுக் கொடுப்­புக்­களை இன்­றைய ஆட்­சிக்­காக எமது தலை­மை­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­த­மை­யால் தெற்­கில் ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் மாற்­றம் எம்மை மேலும் பல­வீ­னப்­ப­டுத்தி இருக்­கின்­றதோ என்று சிந்­திக்க வைக்­கின்­றது.
ஒரு சில­ரின் தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்­கள் கார­ண­மாக வடக்கு மாகாண சபை­யின் நிர்­வா­கங்­க­ளைச் சரி­யான முறை­யில் செய்­ய­வி­டா­மல் தமிழ் அர­சுக் கட்­சி­யின் ஒரு பகு­தி­யி­னர் பல இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி இருந்­த­னர். எம் மக்­க­ளை­யும் மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட மக்­கள் பிர­தி­நி­தி­க­ளை­யும் அந்­நி­யப்­ப­டுத்தி இருட்­ட­றை­யில் தள்­ளி­விட்டு தமது தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப எமது தீர்வு விட­யத்தை ஒரு சிலரே தனி­யா­கக் கையாண்­டார்­கள்.
முத­ல­மைச்­ச­ரான எனக்கே என்ன நடை­பெ­று­கி­றது என்று தெரி­யாத நிலை­யில் மக்­க­ளின் நிலமை என்­ன­வாக இருந்­தி­ருக்­கும் என்று பல சம­யங்­க­ளில் நான் எண்­ணிப்­பார்த்­த­துண்டு. இவை யாவும் வெளிப்­ப­டைத் தன்­மை­யற்ற நடை­மு­றை­மை­யின் பிர­தி­ப­லிப்­புக்­களே.
இனி­யா­வது ஓரி­ரு­வர் முடி­வு­களை எடுக்­கும் நிலை மாற்­றப்­பட்டு சக­ல­ரை­யும் பங்­கு­தா­ரர்­க­ளாக உள்­வாங்கி ஆக்­க­பூர்­வ­மான தீர்க்­க­த­ரி­ச­னம் மிக்க செயற்­பா­டு­களை கட்சி வேறு­பா­டு­கள் கடந்து முன்­னெ­டுத்து எமது மக்­க­ளுக்­கான பணியை ஆற்ற நாம் யாவ­ரும் ஒன்று கூட வேண்­டும்.- என்­றுள்­ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila