முள்ளிவாய்க்காலில் ஒலிபெருக்கி மூலம் மிரட்டும் பொலீஸ் (காணொளி)


வணக்கத்துக்குரிய அருட்தந்தை எழில்ராஜன்
அவர்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாயலத்துக்கு அருகில் இறுதிப்போரில் இறந்தோருக்கான நடுகற்களுடன் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிலையில் அது நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் காரணம் காட்டி நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இன்று அந்த பிரதேசங்களில் சிறிலங்கா பொலீசார் ஒலிபெருக்கி மூலமும் நினைவேந்தலை தடுக்கும் முகமாக அறிவித்தலை விடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.





இது இவ்வாறிருக்க நேற்றைய தடை உத்தரவை அடுத்து ஏற்பாட்டு குழுவால் இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு அந்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டு தற்போது நினைவுக்கற்கள் உள்ள பகுதிக்கு செல்லாது நினைவுகூருமாறு நிதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டத்தரணியும் மனிதஉரிமை செயற்பாட்டாளருமான குமரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila