உள்ளூராட்சி சபைகள் நாளை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
எண் சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் 8 என்ற எண்ணில் நல்ல காரியங்களை ஆரம் பிக்க மாட்டார்கள்.
எனினும் உள்ளூராட்சி சபைகள் நாளை 26ஆம் திகதி கூடவுள்ளது.
26 என்பது எண் 8 ஆக இருப்பதால் உள்ளூ ராட்சி சபைகளின் கூட்டங்களும் களேபரம் நிறைந்ததாகவே அமையும் என்பது எண் சோதிடர்களின் கணிப்பு.
இதை நாம் கூறும்போது, இந்தக் காலத்தில் எண் சோதிடத்தின் மீது இவ்வளவு நம்பிக் கையா? என்று யாரேனும் கேட்டால்,
ஐயா! உலகம் முழுவதும் 13ஆம் இலக் கத்தை ஓரங்கட்டியுள்ளதே அது ஏன்? என்ற மறுத்தான் கேள்வியை முன்வைக்க முடியும். எதுஎவ்வாறாயினும் நம்பிக்கை என்பதுதான் முக்கியம்.
அந்த வகையில் எண் சோதிடத்தை நம்பு பவர்கள் அதன் மீது அதீத கவனம் செலுத்து வர் என்ற அடிப்படையிலேயே, உள்ளூராட்சி சபைகளை 26ஆம் திகதி ஆரம்பிப்பதென்பது அந்தச் சபைகள் சிக்கலை எதிர்கொள்ளும் என எண் சோதிடர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கணிப்பு சரியோ பிழையோ என்பதை விட, வடக்கு கிழக்கு மாகாணங் களில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் களே பரங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணை களும் நடக்கும் என்பதும் ஆளுங்கட்சியின் தீர்மானங்களும் வரவு செலவுத் திட்டங்களும் வாக்கெடுப்பில் நிறைவேறாமல் போகும் என்ப தும் தெரிந்த உண்மை.
அந்த வகையில் உள்ளூராட்சி சபைகள் நாளை 26ஆம் திகதி ஆரம்பமாவது மேற்குறிப் பிட்ட எதிர்வுகூறலுக்கு கட்டியம் கூறுவதாக இரு க்கலாம் என்பது நம் தாழ்மையான கருத்து.
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, உள்ளூராட்சி சபைகள் ஒற்றுமையாக இயங்கி மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒற்றுமையாக இயங்கி மக்களுக்குச் சேவை யாற்ற வேண்டும் எனக் கேட்பது ஒரு சம்பிர தாயபூர்வமான விடயமாயினும் ஒற்றுமை என்பது பற்றிக் கூறுகின்றவர்கள் தம்மளவில், தம் நிறுவன மட்டத்தில் ஒற்றுமையைக் கோரி னார்களா? எல்லோரையும் அரவணைத்துச் சென்றார்களா? என்பது பற்றி மக்கள் கேள்வி எழுப்பவே செய்வர்.
ஆக, உள்ளூராட்சி சபைகள் ஒற்றுமையாக இயங்கி தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.
இதைச் செய்வதற்காக ஒரு பொதுவான குழு அல்லது அமைப்பு ஒன்றை உருவாக்கி அதில் புத்திஜீவிகள் அரசியலாளர்கள் சமூக சேவையாளர்களை உள்ளடக்கி அவர்கள் ஊடாக உள்ளூராட்சி சபைகளில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் குழப்பங்கள் வரும்போது அவை தொடர்பில் சமரசம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைகள் குழப்பமின்றி இயங்கும்.
இல்லையேல் என்ன நடக்கும் என்பதை அனை வரும் வெளிப்படையாக அறியும் வாய்ப்பு ஏற்படும்.