தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் : ஐ.நா
இலங்கையின் நீதித்துறையில் பாரிய பின்னடைவுகள் காணப்படுவதாகவும், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியென்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார கால இலங்கை விஜயம் பூர்த்தியான நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை நீதித்துறையை பொறுத்தவரையில், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியன பற்றாக்குறையாக காணப்படுவதோடு, விசாரணை பொறிமுறைகளில் பல நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு, சட்டமா அதிபர் திணைக்களத்திலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், பல வழக்கு விசாரணைகள் வருடக்கணக்கில் நீண்டு செல்வதால் பலர் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இணக்கச் சபைக்கு முன்னுரிமை கொடுத்து, அதனை வினைத்திறனுடையதாக மாற்றுவதன் ஊடாக, வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு உதவக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்தலாமென ஆலோசனை வழங்கினார்.
Add Comments