அரசு மற்றும் தனியார் துறைகளில் கடமை யாற்றிவிட்டு ஓய்வுபெற்றவர்களில் கணிசமானவர்கள் அடுத்து என்ன செய்வது என்ற விடை காணமுடியாத வினாவுடன் காலம் கழிக்கின்றனர்.
இதில் ஒருபகுதியினருக்கு குடும்பச் சுமை தீராமல் இருக்கலாம். பிள்ளைகளின் உயர் கல்வி, திருமணம் என்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பவர்களாக இருப்பர்.
எனினும் இன்னும் கணிசமானவர்கள் பணிகளில் இருந்து ஓய்வுபெற்றிருப்பது மட்டுமன்றி, குடும்பச் சுமைகளையும் இறக்கி வைத்தவர்களாக சுதந்திரமாக இருப்பர்.
இத்தகையவர்களை நோக்கியதே இவ் விண்ணப்பமாகும்.
அன்புக்குரிய பெரியவர்களே! தமிழினம் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
கூடவே எங்கள் இளம் சமூகம் தம்மை வழிப் படுத்த முடியாமல் தத்தளிக்கிறது. கையடக்கத் தொலைபேசியும் மதுவும் அவர்களை நகர விடாமல் தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
இவைதவிர, ஒரு பகுதி இளைஞர்கள் வாள்வெட்டு கலாசாரத்துக்குள் இறங்கி தங்களையும் கெடுத்து தங்கள் குடும்பங்களையும் துன்பக் கடலில் வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் யாரோ பிள்ளை கள் என்று நாம் பேசாதிருந்தால் எங்கள் வாழ் வும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.
எனவே இந்த மண்ணில்தான் எங்கள் முந்தையர்களும் எந்தையும் தாயும் நாமும் எங்கள் பிள்ளைகளும் வாழ்ந்தோம். வாழப் போகிறோம்.
மண்சரிவில்லை, சூறாவளியில்லை, பூமிய திர்ச்சியில்லை, அதிகூடிய வெப்பம் இல்லை, அளவுக்கதிகமான குளிரில்லை, இயற்கை அனர்த்தம் இல்லை. எங்கு பார்த்தாலும் தெரி ந்த முகங்கள், உறவுகளின் கூட்டங்கள்.
வீதியில் இறங்கினால் நின்று கதைத்து சிரித்து மகிழ்ந்து பிறர் துன்பம், துயரம் பகிர்ந்து ஆறுதல் கூறி வாழ்கின்ற இந்த வாழ்வு உல கில் எங்கும் கிடையாதென்பதே உண்மை.
இப்பெரும் பாக்கியம் இங்கு வாழுகின்ற நமக்கு இறைவன் தந்தான் எனில் அதனைக் காப்பாற்றுகின்ற பெரும் பொறுப்பு நம்முடையது.
ஆகையால் ஆழ்ந்தகன்ற சான்றோர்களே! உங்கள் ஓய்வுக்காலம் தமிழினத்துக்கான அர்ப்பணிப்புக் காலமாக மாறட்டும்.
இதற்காக தமிழ் மக்கள் பேரவை எனும் மக்கள் இயக்கத்தில் நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து நம் இனம் வாழ உங்கள் சேவையை ஆற்றுங்கள்.
உங்களிடம் இருக்கக்கூடிய நிர்வாக அறிவு, மொழிப்புலமை, அரசியல் அனுபவம், புவிசார் அறிவியல், தகவல் தொடர்பாடல் என்பவற் றின் மூலமாக தமிழினத்துக்கும் தமிழர் தாய கத்துக்கும் உங்கள் சேவையை வழங்க முன்வாருங்கள்.
உங்கள் அர்ப்பணிப்பான சேவை எதிர்காலத்தில் எங்கள் இனத்தின் எழுச்சிக்குப் பேருதவியாக அமையும்.