பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்து அபிவிருத்திக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதி ரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த பின்னர் முதற்தடவையாக பிரத மர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு உதவுவதாக இருந்தால்; காணி விடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை என ஏகப்பட்ட விடயங் கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பலரும் கருத்துக் கூறியிருந்தனர்.
ஆனால் ஏலவே பட்ட கடனுக்காகவோ என்னவோ எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல் இரா. சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு பிரதமர் ரணிலை ஆதரித்தது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க பறிகொடுப்பார் என்று கருதப்பட்டவேளையில், அவரை ஆதரி க்க கூட்டமைப்பு தயாரானபோது, கூட்டமைப் பின் ஆதரவில் ரணில் வென்றுவிட்டதான நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க பாராளு மன்ற உறுப்பினர்கள் பலரும் முன்வந்தனர்.
இதன்காரணமாக கூட்டமைப்பு வாக்களிக்கா விட்டாலும் வென்றிருப்போம் என்பதாக பிரத மர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு நிலைமை மாறியது.
ஆக, ஆதரித்தும் பயனில்லை என்பதே கூட்டமைப்பின் இராஜதந்திர முடிவு. இவை ஒருபுறம் இருக்க, நேற்று முன்தினம் யாழ்ப் பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் வருகை தந்த பிரதமர் ரணில், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தமிழ்த் தரப்பு தன்னிடம் தட்டி விட்ட பந்தை மீண்டும் தமிழ்த் தரப்பிடமே வீசி எறிந்து நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஒன்றாகச் சேர்ந்து என்னென்ன அபிவிருத் தித் திட்டங்கள் தேவை என்பதை முடிவு செய்து கொண்டு வாருங்கள் எனத் தட்டிக் கழித்துள் ளார்.
அபிவிருத்திக் கூட்டம் நடக்கப்போகிறது என்றால், முன்கூட்டியே மேற்போந்த அறிவித் தலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தரப்பிடம் தெரியப்படுத்தியிருந்தால், தமிழ்த் தரப்பினர் எல்லோரும் ஒன்றுகூடி முன்னுரிமை அடிப் படையில் தயார் செய்த அபிவிருத்தித் திட் டத்தை நேற்று முன்தினம் பெற்று அதனை ஆராய்ந்திருக்கலாம்.
ஆனால் முன்கூட்டி இதனைத் தெரிவிக்கா மல், தட்டிக்கழித்து தமிழ் மக்களை ஏமாற்று கின்ற நாடகத்தை பிரதமர் ரணில் மீண்டும் கனகச்சிதமாக செய்து முடித்துள்ளார்.
இனி நாங்கள் எல்லோரும் ஒன்றுகூடி தயாரிக்கின்ற அபிவிருத்தித் திட்டத்தை ஆராய பிரதமர் ஐயா எப்போது வருவார் என்பது யார்க்கும் தெரியாது.
ஏதோ யாழ்ப்பாணத்து குளிர்களி அவரைக் குளிர்மைப்படுத்தியிருந்தால் அவரின் வருகை விரைவாக இருக்கும். அதுவுமில்லை என் றால் தயாரித்த அபிவிருத்தித் திட்டத்துக்கு சாம்பிராணிப் புகை காட்ட வேண்டியதுதான்.