அறிவாயுதத்துடன் எம் இளைஞர்கள் தமிழினத்தை வழிநடத்த வேண்டும்.


தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கான புத்துரு வாக்கப் பணிகள் நடந்தவண்ணமுள்ளன.

இன்றுவரை தமிழினம் விழித்திருந்து தனக் கெதிரான சதித்திட்டங்களை உடைத்தெறி கிறது எனில் அதற்கு மூலகாரணம் இனப்பற் றும் மொழிப்பற்றும் கொண்ட நம் இளைஞர் களே என்றால் அது மறுக்க முடியாத நிதர்சன மாகும்.

இளைஞர்கள் அதர்மத்துக்கு அநீதிக்கு எதிராகச் சதா சிந்திப்பவர்கள். அவர்களிடம் பதவி ஆசை கிடையாது. பகட்டுச் சிந்தனை கிடையாது. எம் இனம் வாழவேண்டும், யுத்தத் தால் எல்லாம் இழந்துபோன எங்கள் மக்கள் மீண்டும் எழ வேண்டும் என்பதுதான்.
இத்தகைய உன்னதமான நினைப்புகள் அன்று முதல் இன்றுவரை  நம் இளைஞர்களி டம் வேரூன்றியிருப்பதால்தான் உலகம் வியக் கும் தியாகத்தை எங்கள் மண் இந்த உலகுக்கு வரலாறாகக் கொடுத்தது.

எத்தனை நாடுகள் திரண்டு எம் இனத்துக்கு துரோகம் இழைத்த போதிலும் எங்கள் இனம் தளராமல் தலைநிமிர்ந்தெழ வேண்டும் என்ற மனத்திடத்தைக் கொண்டுள்ளதெனில், அதற்கு அடிப்படை நேர்மைத்திறன்மிக்க நம் இளை ஞர்கள் என்றால் அதில் மிகைப்படுத்தல் எதுவு மில்லை.

அதேநேரம் ஆயுத பலம் முடிவுக்கு வர, அறி வுப் பலத்தோடு எம் தமிழ் இளைஞர்கள் தங் கள் எழுச்சியை முன்னிலைப்படுத்த வேண் டும் என்ற கருத்தினை வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் ஆற்றிய உரையில் குறிப் பிட்டிருந்தார்.

எனவே எம் இளைஞர்கள் அறிவாயுதத் தைக் கொண்டு தமிழர் தாயகத்தில் நடக்கும் அநீதிகளை, அதர்மத்தனங்களை வெட்டிப் புதைக்க வேண்டும்.

எங்கெல்லாம் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுக்க எங்கள் இளைஞர்கள் தயாராகுவது கட்டாயமானதாகும்.
இந்த அறிவாயுதத்தை பயன்படுத்துவதில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற் றும் இளைஞர்கள் முன்னிற்க வேண்டும்.

வீட்டுத்திட்டத்தில் ஒரு அரச பணியாளர் பேரம் பேசுகிறார் என்றால்; குறித்த வீட்டுத் திட் டத்தை வைத்து ஓர் அரச உத்தியோகத்தர் குரோதம் செய்ய நினைக்கிறார் என்றால் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அந்த அக்கிரமத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது அவசியமாகிறது.

எமது உரிமை என்பது முதலில் எங்களால் தடைப்படாமல் இருக்க வேண்டும்.
என் உறவினனுக்குக் கிடைக்க வேண்டி யதை நானே தடுத்துக் கொண்டு எனக்கு உரிமை தா என்று கேட்பதில் அடிப்படை நியா யம் இருப்பதாக எவரும் நினைக்க முடியாது.
எனவே அன்பார்ந்த இளைஞர்களே! அறி வாயுதத்தை ஏந்துங்கள். அதனூடு நீதி, நியா யம், நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கடமை என்பவற்றை வலுப்படுத்துங்கள். இதைச் செய்யும்போது எல்லாம் வெற்றியாகும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila