காணாமல் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவரின் படம் வெளியானது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதியின் புகைப்படத்தை International Truth and Justice Project எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2009ம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்களை Truth and Justice Project வெளியிட்டுள்ளது.
இதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் 351 நபர்களின் பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதியின் புகைப்படத்தை International Truth and Justice Project எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இறுதிகட்டப் போரின்போது இளம்பரிதி முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP தெரிவித்துள்ளது.
இளம்பரிதியின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண்பிள்ளை ஆகியோரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை கடைசியாக வட்டுவாகல் பகுதியில் கண்டதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளதாகவும் ITJP தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளதுன், அவர்களது குடும்ப படம் ஒன்றையும் ITJP வெளியிட்டுள்ளது.
இதேவேளை, International Truth and Justice Project இன் பெயர்ப் பட்டியல் தமது கவனத்தை ஈர்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளிட்ட காணாமல் போனோரின் பெயர்ப் பட்டியல் வெளியானது!
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila