ஹலோ கைகேயி... நான் இங்க மந்தரை...

இராமாயணத்தின் தோற்றுவாய் என்று கூறக்கூடிய கைகேயியும் அவள் தோழியான மந்தரை எனும் கூனியும் சமகாலத்தில் சந்தித் தால் என்ன விடயம் பற்றிப் பேசுவார்கள் என்று கற்பனை செய்தோம்

அட, வேலை இல்லையயன்றால் இப்படி யான கற்பனைகள்தான் வரும் என்று யாரும் நினைத்து விடாதீர்கள். இன்றைய கால சூழல் அப்படியயாரு கற்பனைக்கு வழி வகுத்தது.
இதோ! கைகேயியும் அவள் தோழி கூனியும் தொலைபேசி வாயிலாக உரையாடுகின்றனர்.

கூனி: ஹலோ கைகேயி நான் கூனி பேசுறன்.
கைகேயி: அட, நீண்டகாலம் சந்தித்து அந்த  யுகத்தில தொலைபேசி இல்லை. அடிக் கடி அந்தப்புரத்தில் சந்தித்தம் இப்ப...
சரி சரி என்ன சங்கதி.

கூனி: என்ன சங்கதியோ இப்ப எங்கள் மண்ணில நடக்கிறது தெரியும்தானே! 
கைகேயி: சத்தியமாச் சொல்லுறன் எனக்கு ஒன்றும் தெரியாது. 
கூனி: கைகேயி தமிழ் மக்கள் பேரவைக் குள்ள குழப்பம் என்பது உனக்குத் தெரியாதோ!
கைகேயி: இம்... தொடங்கிற்ற, இராமரைக் காட்டுக்கு அனுப்பி அயோத்தி மாநகரச் சிம்மாசனத்தில் 14 ஆண்டுகள் பாதுகையை இருக்கச் செய்து; என்ர மானத்தையும் கப்பல் ஏற்றின நீ, இப்ப என்ன சொல்லுற.

கூனி:  தமிழ் மக்கள் பேரவையைக் குழப்பி னால்தான் உன் போன்றவர்களின் இருப்புச் சரி வரும். எப்படியாவது குழப்பு.
கைகேயி: இஞ்சே! கூனி ஒருக்கால் பட்டது போதும். தமிழ் மக்கள் பேரவை ஒன்றுதான் தமிழ் மக்களின்ர நம்பிக்கைக்குரிய அமைப் பாக இருக்குது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின்ர தலைமையைத்தான் தமிழ் மக்கள் விரும்பு கின்றனர்.

அவர் ஆற்றுகிற யதார்த்தமான உரை களாலதான் தமிழ் மக்கள் ஓரளவுக்கேனும் ஆறுதல் அடையினம். அதுக்கும் உலைவைச் சுப் போடாத.
கூனி: கைகேயி உனக்கு ஒன்றும் விளங் கல்ல. முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு மக்கள் மத்தியில இருக்கிற செல்வாக்கை உடைக்காவிட்டால் நாம் ஒன்றும் செய்ய ஏலாது.

கைகேயி: கூனி, நீ சொல்லுவதற்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டன். எங்கட தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்ய நான் ஒரு போதும் தயாரில்லை.
கூனி: நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பேரவைக்குள் குழப்பம்; பேரவை இரண்டாக உடைந்து போயிற்றுது; அதிகாரத்தை முதல மைச்சர் தன் கையில் எடுத்துக் கொண்டார். இப்படித் தகவல்களைச் சொல்லு அதுபோதும். 
கைகேயி: கூனி, தமிழ் மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். அவர்கள் தமிழ் மக்கள் பேரவையிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்.

தமிழ் மக்களை இனி யாராலும் ஏமாற்ற முடியாது. அவர்கள் மிகத் தெளிவாகவும் விழிப்பாகவும் உள்ளனர்.
கூனி: கைகேயி உனக்கு நான் சொன்னால் விளங்காது. தமிழ் மக்கள் பேரவையையும் முதல மைச்சர் விக்னேஸ்வரனையும் தகர்த் தால் தான், எங்களால அரசியல் பிழைப்பு நடத்த முடியும். ஒருக்கால் அது பற்றி சிந்தித்துப் பார்.
கைகேயி: சரி... சரி... முயற்சித்துப் பார்க் கிறன். வரம் கேட்பதுதான் யாரிடம் என்று தெரியவில்லை.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila