கொழும்பிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்ட அரச பேருந்து கிண்ணியா ஊடாக திருகோணமலை செல்லவிருந்த நிலையில் பாதியில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏறுமாறு கூறி விட்டு சென்றதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதிக அளவிலான பொருட்களை ஏற்றி வந்த பயணிகள் இடையில் இவ்வாறு இறக்கி விடப்பட்டுள்ளதாகவும், இதனால், பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் .
இதேவேளை, இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருப்பதற்கு அரச பேருந்து சபையின் முகாமையாளர்கள் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர் .

