![]()
மானிப்பாய், அட்டகிரியில் நேற்று மதியம் வாள்களுடன் வந்த குழு வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடந்தியுள்ளது. 4 வீடுகளும், கடை ஒன்றும், மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்ததுடன், ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் ஒன்று தீக்கிரையாக் கப்பட்டுள்ளது.
|
நேற்று மதியம் 1.30 மணியளவில் 4 மோட்டார் சைக்கிள்களில் முகங்களையும், வாகன இலக்கங்களையும் மறைத்தவாறு வந்த 8 பேர் கொண்ட குழுவே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது. வாள்கள், கோடரிகளுடன் வந்தவர்கள் வீடுகளை அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். கடை ஒன்றையும் சேதப்படுத்தியதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். குளிர்களி விற்பனை வாகனம் ஒன்றுக்குத் தீ வைத்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான வீடுகள் சில தனு ரொக் எனப்படும் வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் என்று மானிப்பாய் பொலிஸார் கூறுகின்றனர். அவர்களில் சிலர் மீது வழக்குகள் பதியப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நவாலியைச் சேர்ந்த 4 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 26 மற்றும் 25 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
![]() ![]() ![]() ![]() ![]() |
வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையில் தொடரும் மோதல்கள் - வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல்!
Related Post:
Add Comments